
மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த ஜப்பானிய தூதர் - வைரல் புகைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா நாட்டுக்கான ஜப்பானியத்தூதரக இருப்பவர் ஹிரோஷி சுசுகி.
இவர் நேற்று(ஜூன்.,1)மும்பை சென்றுள்ளநிலையில்,மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத்ஷிண்டே அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து மும்பை சாலைகளில் சாதாரண மனிதர்போல் நடக்க துவங்கிய இவர், லோக்கல் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
பின்னர் நடைபாதை வியாபாரிகளின் கடைகளுக்கு சென்று சட்டை ஒன்றினை வாங்க பேரம் பேசியுள்ளார்.
இதுத்தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவுச்செய்துள்ள இவர், லோக்கல் ரயிலில் பயணம் செய்த புகைப்படத்தினை வெளியிட்டு, நான் மும்பையில் இருக்கிறேன் என்று பதிவுச்செய்துள்ளார்.
அதேபோல் நடைபாதை கடையில் ரூ.100விலை கொண்ட சட்டையுடன் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு, என்ன பேரம் பேசலாம், நான் வாங்கட்டுமா? என்று கேள்வியினை எழுப்பியுள்ளார்.
இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
I’m in Mumbai!! pic.twitter.com/qIp4VuiPj8
— Hiroshi Suzuki, Ambassador of Japan (@HiroSuzukiAmbJP) June 1, 2023