மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி காக்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 140 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் வீடியோவை மணிப்பூர் காவல்துறை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
மணிப்பூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று(ஜூன் 1) எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், மணிப்பூரின் ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் சில மணிநேரங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஆனால், திங்கள்கிழமை வரை மாநிலம் முழுவதும் இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது.
details
மணிப்பூரில் ஒரு மாதமாக நடந்து வரும் இனக்கலவரம்
மணிப்பூரில் கடந்த ஒரு மாதமாக இனக்கலவரம் நடந்து வருகிறது.
அங்கு நடந்த இன மோதல்களால் இதுவரை குறைந்தது 80 பேர் பலியாகியுள்ளனர்.
மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்ப்பது தொடர்பான பிரச்சனையால் மணிப்பூரில் வன்முறை வெடித்தது.
இதற்கு எதிராக 33 பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 3ஆம் தேதி 33 பழங்குடியின சமூகங்கள் சேர்ந்து, மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை தொடர்ந்து வன்முறை வெடித்தது.
இந்நிலையில், இந்த வன்முறைக்கு ஒரு தீர்வு காண நான்கு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்றுள்ளார்.