
சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 100வது பிறந்தநாள் முன்னிட்டு இந்தாண்டு முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டு விழாவின் துவக்க நிகழ்ச்சி இன்று(ஜூன்.,2) சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா லோகோவினை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.
அதனை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் மற்றும் மகாத்மா காந்தியின் பேரனுமான மேற்குவங்க முன்னாள் ஆளுநரான கோபாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
இதற்கு பின்னர் பேசிய முதல்வர், தமிழ்நாட்டினை செதுக்கிய சிற்பி கலைஞர் கருணாநிதி.
50 ஆண்டு கால தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமானவர் இவர்.
கருணாநிதி உலக தமிழர்களின் சொத்து என்று புகழாரம் சூட்டினார்.
மு.க.ஸ்டாலின்
25 ஏக்கரில், 5000 பேர் அமரும் வகையில் பன்னாட்டு அரங்கம்
தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதியின் இந்த நூற்றாண்டு விழாவாக மட்டுமல்லாமல், தமிழக சமுதாயத்திற்கு அவர் செய்ததை நினைவுபடுத்தும் வகையில் அமையும்.
சென்னையில் டைடல் பார்க்கினை கொண்டு வந்து தகவல் தொழில் புரட்சியினை ஏற்படுத்தியவர் இவர்.
இந்நிலையில் சென்னையில் உலக தரத்தில் கலைஞர் கன்வென்சன் என்னும் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், 25 ஏக்கரில், 5000 பேர் அமரும் வகையில் இந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
மாநாடுகள், திரைப்பட விழாக்கள் உள்ளிட்டவை இங்கு நடைபெற அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது தனக்கு இந்த எண்ணம் வந்ததாகவும், மிக பிரம்மாண்டமாக கலைஞரின் கன்வென்சன் சென்டர் அமைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.