Page Loader
தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

எழுதியவர் Sindhuja SM
Jun 02, 2023
06:01 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன்-2 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஜூன்-3 மற்றும் ஜூன்-4 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஜூன்-5 மற்றும் ஜூன்-6 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 செல்சியஸாகவும் இருக்கும்.

ட்விட்டர் அஞ்சல்

தமிழ்நாட்டின் மழை நிலவரம்