LOADING...
காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள் 
இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்

காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள் 

எழுதியவர் Arul Jothe
Jun 02, 2023
02:05 pm

செய்தி முன்னோட்டம்

மற்ற இயக்குனர்களை போல யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனராக படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிரத்னம் மட்டும் தான். ஆரம்பத்தில் மும்பையில் தொழில் செய்து வந்த இவர் அண்ணன் ஜி. வெங்கடேஸ்வரன் உதவியோடு திரைத்துறையில் இறங்கினார். மழை, ரயில், கடல் என திரை உலகில் சுமார் 35 ஆண்டுகளாக தனித்துவமான படைப்புகளை கொடுத்து வருகிறார். கன்னட படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்ட இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் தமிழ் திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை கொடுத்தது. 1986 ஆம் ஆண்டு நடிகர் மோகன்-ரேவதி நடிப்பில் வெளியான மௌன ராகம், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் இவருக்கு உச்ச வெற்றியை அடைய உதவியது.

Maniratnam Birthday 

இயக்குனர் மணிரத்னத்தின் படைப்புகள் 

தேச ஒற்றுமை மற்றும் நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட தில் சே, ரோஜா போன்ற படங்களும் இவரது வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமைந்தது. அந்த காலகட்டத்திலேயே இது போன்ற பான் இந்தியா படங்களை இயக்கினார் மணிரத்னம். பகல் நிலவு, இதயக் கோயில், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை என அனைத்துமே இவரது படைப்புகளே. மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சோழசாம்ராஜ்யத்தின் சிறப்புக்களை கூறும் பொன்னியின் செல்வன் படம் இவருக்கு உலகம் முழுவதும் பாராட்டை பெற்று தந்துள்ளது. ஒரு படத்துக்கு 22 கோடி வரை மணிரத்னம் சம்பளம் பெறுவதாக பேசபட்டு வருகிறது.