வெளிநாட்டில் இருக்கும் மகன்/மகளுக்கு பணம் அனுப்புவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
தற்போது படிப்பிற்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அப்படி வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தியாவிலிருந்து பெற்றோர்கள் பணம் அனுப்ப வேண்டியிருக்கும்.
அப்படி பணம் அணுப்ப வேண்டியிருப்பவர்கள், எவ்வளவு அனுப்ப முடியும், அதற்கான விதிமுறைகள் என்ன? பார்க்கலாம்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் மகன்/மகளுக்கு Liberalised Remittance Scheme (LRS) திட்டத்தின் கீழ் பெற்றோர்களால் பணம் அனுப்ப முடியும்.
இந்த LRS திட்டத்தை 2004-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2,50,000 டாலர்கள் வரை வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப முடியும்.
இத்தனை முறை மட்டுமே பணம் அனுப்ப முடியும் என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை.
இந்தியா
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
ஒரு ஆண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் வெளிநாட்டிற்கு இருக்கும் பிள்ளைகளுக்கு பணம் அனுப்பிக் கொள்ளலாம். ஆனால், அதன் மதிப்பு 2,50,000 டாலர்களைத் தாண்டக் கூடாது.
பணம் அனுப்புவதற்கான வழிமுறைகளை வங்கிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவர்களே, பணம் அனுப்புவதற்கான வழிமுறைகளை விளக்கி அதற்கு தேவையான ஆவனங்களை தயாரிக்கவும் உதவுவார்கள்.
வரும் ஜூலை 1 முதல் LRS திட்டத்தின் கீழ் அனுப்பப்படும் பணத்திற்கான TCS (Tax Collected at Source) அளவை 5%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.
ஆனால், ரூ.7 லட்சம் வரையிலான பணத்திற்கு TCS எதுவும் இல்லை. மேலும், இந்த உயர்த்தப்பட்ட வரி விகிதமானது படிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.