அடுத்த செய்திக் கட்டுரை
ஃபிரஞ்சு ஓபன் மூன்றாவது சுற்றில் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ்!
எழுதியவர்
Sekar Chinnappan
Jun 02, 2023
03:25 pm
செய்தி முன்னோட்டம்
ஃபிரஞ்சு ஓபன் தொடரின் மூன்றாவது சுற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 2) பாரிஸின் ரோலண்ட்-காரோஸில் தொடங்கும் நிலையில், நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ் மற்றும் அரினா சபலெங்கா ஆகிய முக்கிய டென்னிஸ் வீரர்கள் இதில் விளையாட உள்ளனர்.
நோவக் ஜோகோவிச் ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினாவை எதிர்கொள்கிறார். கார்லோஸ் அல்கராஸ் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொள்கிறார்.
அரினா சபலெங்கா, கமிலா ரக்கிமோவாவை எதிர்கொள்கிறார். இவர்கள் தவிர மேலும் பல வீரர்களும் தங்களது மூன்றாவது சுற்றில் வெள்ளிக்கிழமை விளையாட உள்ளனர்.
இந்திய டென்னிஸ் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஃபிரஞ்சு ஓபனின் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசிக்கலாம் மற்றும் சோனிலைவ் மற்றும் ஜியோடிவி செயலிகளிலும் போட்டிகளை நேரடியாக பார்க்கலாம்.