தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப அலையானது வீசிய காரணத்தினால் பள்ளிகள் திறப்பானது தள்ளி வைக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை முன்னதாக, 6லிருந்து 12ம்வகுப்பு வரை பயிலும் பள்ளிமாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5ம்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். பின்னர் கோடைவெயில் தாக்கம் அதிகரித்த காரணத்தினால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளும் ஜூன் 7ம்தேதி திறக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் வரும் 7ம்தேதி பள்ளிகள் திறப்பதையடுத்து, தமிழகத்தில் சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2,200 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும். மதுரை, திருச்சியிலிருந்து முன்பதிவில்லாத பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.