இந்தியா: செய்தி

'செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்த முடியும்': பில் கேட்ஸிடம் பேசிய பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் பேசினார். நாட்டில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கான தனது குறிக்கோள் குறித்து அவரிடம் பிரதமர் மோடி கூறினார்.

துருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளியிட முடியாது: மாலத்தீவுகள்

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை மாற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், துருப்புக்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக மாலே மற்றும் புதுடெல்லி இடையேயான ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட மாட்டோம் என்று மாலத்தீவின் அரசாங்கம் கூறியதாக மாலத்தீவு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

27 Mar 2024

மும்பை

ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை

சமீபத்திய ஹுருன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் உலகளாவிய பணக்காரர் பட்டியலின்படி, முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான பில்லியனர்களுடன், ஆசிய தலைநகர் என்ற பட்டத்தை மும்பை பெற்றுள்ளது.

IPLஇல் பந்தயம் கட்டி ரூ.1 கோடியை இழந்த கணவன்: மனைவி தற்கொலை 

தர்ஷன் பாபு என்பவர் கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டுவதில் விருப்பமுள்ள ஒரு பொறியாளர் ஆவார்.

சந்திர கிரகணம்: அற்புத விண்வெளி நிகழ்வை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி?

இந்தியாவில் இன்று ஹோலி கொண்டாட்டங்களுடன் இணைந்து, மற்றுமொரு வண்ணமயமான வானியல் நிகழ்வை வானியலாளர்கள் மற்றும் நட்சத்திரக்காரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

24 Mar 2024

ஹோண்டா

வெறும் 6 மாதங்களில் 30,000 யூனிட் விற்பனையாகி ஹோண்டா எலிவேட் சாதனை 

வெறும் 6 மாதங்களில் 30,000 யூனிட் ஹோண்டா எலிவேட் கார்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

23 Mar 2024

டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசிய ஜெர்மனிக்கு இந்தியா எதிர்ப்பு

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து ஜெர்மனி தூதுவர் கருத்து தெரிவித்ததற்கு இந்தியா இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை "சீனாவின் உள்ளார்ந்த பகுதி" என்று சீன ராணுவம் அழைத்ததையடுத்து, இந்தியப் பிரதேசமாக வாஷிங்டன் அங்கீகரித்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

20 Mar 2024

ரஷ்யா

உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல் 

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

தொடர்ந்து 7வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வு; இந்தியா எந்த இடம் தெரியுமா?

ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைபடி, பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.

"குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீம்களை எப்படி பாதிக்க போகிறதோ': அமெரிக்கா செனட்டர் கவலை 

குடியுரிமை திருத்த சட்டம், 2019ஐ(CAA) அமல்படுத்துவதற்கான விதிகளை இந்திய அரசாங்கம் அறிவிக்க இருக்கும் நிலையில், அது குறித்து அமெரிக்க செனட்டர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

"இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம் 

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் இந்து தர்மத்தை "வேண்டுமென்றே அவமதிப்பதாக" இன்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மதத்திற்கு எதிரான அவர்களின் ஒவ்வொரு கருத்தும் "நன்கு சிந்திக்கப்பட்டவை" என்று விமர்சித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா 

பாஜகவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் இன்று காலை தனது ராஜினாமாவை அறிவித்தார்.

மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும் 

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் சேமிக்கப்படும் என்று மார்ச் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலைத்தீவுகளின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து  விவரங்களையும் வெளியிட வேண்டும்': எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

17 Mar 2024

தமிழகம்

தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல் 

'லாட்டரி மன்னன்' சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது.

ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி 

ஐநா பொதுச் சபையில் கருத்து தெரிவிக்கும் போது பாகிஸ்தான் தூதுவர், அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

15 Mar 2024

மாருதி

பாகிஸ்தானின் வாகன சந்தையை மிஞ்சிய, இந்தியாவின் மாருதி வேகன்ஆர் விற்பனை

பிப்ரவரி 2024இல், இந்தியாவின் வாகன சந்தை விற்பனையில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா?

சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பிரபல இந்திய அமெரிக்கர்கள் குழு நடத்திய சிறப்பு கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுவதாகக் கூறியது.

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து

பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு அமலுக்கு வந்தது குடியுரிமைச் சட்டம்

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான திவ்யாஸ்திரத்தை பாராட்டினார் பிரதமர் மோடி 

நாட்டின் புவிசார் அரசியல் நிலையை மாற்றியமைக்கும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, மிகவும் மேம்பட்ட ஆயுத அமைப்பான "திவ்யஸ்த்ரா" என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.

'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம்

நன்கொடையாளர்கள் மற்றும் தேர்தல் பத்திரங்களைப் பெறுபவர்கள் பற்றிய விவரங்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற கடந்த மாத உத்தரவை வேண்டுமென்றே பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றாமல் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

11 Mar 2024

தேர்தல்

தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு

இந்த வாரம் புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2025-க்குள் கடல் படுக்கையை ஆய்வு செய்ய களமிறங்கும் சமுத்ராயன்

இந்தியாவின் புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டமான சமுத்திரயான் பற்றிய அற்புதமான செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.

09 Mar 2024

டெல்லி

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது

2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தால் இன்று கைது செய்யப்பட்டார்.

'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர் 

இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மாலத்தீவை புறக்கணிக்க இந்திய மக்கள் அழைப்பு விடுத்தது மற்றும் அது தனது நாட்டின் சுற்றுலாத் துறையை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கவலை தெரிவித்துள்ளார்.

உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஜங்கிள் சஃபாரியையும், அருணாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

09 Mar 2024

கனடா

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ வைரல் 

கனடாவில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

08 Mar 2024

பண்டிகை

தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?

மகா சிவராத்திரி என்பது புனிதமான இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.

"டெஸ்ட் மேட்ச் இருப்பதால் நீ திரும்பிச் செல்ல வேண்டும்": அஸ்வினின் தாயார் 

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர், அஸ்வின் ரவிச்சந்திரனின் தாய் கடந்த டெஸ்ட் போட்டியின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

2024 உலக அழகி இறுதிப்போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சினி ஷெட்டி

இந்த வாரம் நடைபெறவுள்ள 71வது உலக அழகி போட்டியில், இந்தியாவின் பிரதிநிதியான சினி ஷெட்டி, முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து, ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்தின் முதல் 5 இடங்களில் உள்ளார்.

சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை மாலை 4.15 மணிக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு புதன்கிழமை மீண்டும் உத்தரவிட்டது.

கார்பெட் புலிகள் காப்பகத்தில் மரம் வெட்டப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக கட்டுமானம் செய்யவும் மரங்களை வெட்டவும் அனுமதித்த உத்தரகாண்ட் முன்னாள் வனத்துறை அமைச்சர் ஹரக்சிங் ராவத் மற்றும் முன்னாள் பிரதேச வன அதிகாரி கிஷன் சந்த் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு(UTs) 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

06 Mar 2024

ரஷ்யா

சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற 7 இந்தியர்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக குற்றச்சாட்டு 

சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற தங்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது.

05 Mar 2024

இஸ்ரேல்

இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை 

இஸ்ரேல் - லெபனான் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.

'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி 

இலவச இராணுவ உதவியை மாலத்தீவுக்கு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.