அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான திவ்யாஸ்திரத்தை பாராட்டினார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
நாட்டின் புவிசார் அரசியல் நிலையை மாற்றியமைக்கும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, மிகவும் மேம்பட்ட ஆயுத அமைப்பான "திவ்யஸ்த்ரா" என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மையமான டிஆர்டிஓவால் உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை இன்று தனது முதல் விமானத்தை இயக்கியது.
இந்த புதிய ஆயுத அமைப்பு மல்டிபிள் இன்டிபென்டென்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி வெஹிக்கிள்(MIRV) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. எனவே, இந்த ஒரு ஏவுகணையால், ஒரே நேரத்தில் பல குண்டுகளை வெவ்வேறு இடங்களுக்கு குறிவைத்து வீச முடியும்.
இந்த தொழில்நுட்பம் தற்போது ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. எனவே இதை அறிமுகப்படுத்தி இந்தியா அந்த ஒரு சில நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்தியா
5,500 முதல் 5,800 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய அக்னி-5 ஏவுகணை
"மல்டிபிள் இன்டிபென்டென்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி வெஹிக்கிள் (MIRV) தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி- 5 ஏவுகணையின் முதல் விமான சோதனையான மிஷன் திவ்யஸ்த்ராவை நடத்தி காட்டிய நமது DRDO விஞ்ஞானிகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது" என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஏவுகணை உள்நாட்டு ஏவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் உயர் துல்லிய சென்சார் பேக்கேஜ்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இது ரீ-என்ட்ரி வாகனங்கள் நிர்ணயித்த இலக்கு புள்ளிகளை துல்லியமாக அடைந்தது என்பதை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
அக்னி-5 ஏவுகணை, ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும்(ICBM). இது 5,500 முதல் 5,800 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது.