வெறும் 6 மாதங்களில் 30,000 யூனிட் விற்பனையாகி ஹோண்டா எலிவேட் சாதனை
வெறும் 6 மாதங்களில் 30,000 யூனிட் ஹோண்டா எலிவேட் கார்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாகனம், ஆறு மாதங்களுக்குள் 30,000 யூனிட் விற்பனையைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலிவேட் என்ற மாடலை ஜப்பானில் அறிமுகப்படுத்தி இருக்கும் ஹோண்டா நிறுவனம் WR-V என மறுபெயரிட்டுள்ளது. இது நடந்த சில காலத்தில், ஹோண்டா எலிவேட் கார்கள் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு மாடலை ஹோண்டா நிறுவனம் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வது இது முதல்முறையாகும்.
ஹோண்டா எலிவேட்டின் அம்சங்கள்
ஹோண்டா எலிவேட், குரோம் அப்ளிக் மற்றும் பெரிய ஹோண்டா லோகோவுடன் ஹோண்டாவின் புதிய கால வடிவமைப்பை கொண்டுள்ளது. வளைந்த விளிம்புகள் கொண்ட நீண்ட பானட், ஒரு பெரிய கருப்பு நிற கிரில், ஒருங்கிணைந்த DRLகள் கொண்ட LED ஹெட்லைட்கள், 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ரேப்-அரவுண்ட் டெயில்லேம்ப்கள் ஆகியவை இதில் உள்ளன. லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, எலக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் பேனல் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவற்றை இந்த மாடல் கொண்டுள்ளது.