தெற்காசியாவில் மகா சிவராத்திரி எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?
மகா சிவராத்திரி என்பது புனிதமான இந்து பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. தமிழ் மதமான மாசி மாதத்தில் இந்த நாள் கொண்டாடப்படும். உலகெங்கிலும் உள்ள சிவபக்தர்கள் இந்த நாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இந்நாளில் சிவபெருமானுக்கு உகந்த பல்வேறு சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் இறையருளை வேண்டுவதுண்டு. குறிப்பாக சிவராத்திரி தெற்காசியாவில் உள்ள பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அவை எவை என்பதை காண்போம். இந்தியா: இந்தியாவில், பக்தர்கள் சிவஸ்தலங்கள், அதாவது பழமையான சிவன் கோயில்களுக்கு செல்வத்திலிருந்து விழாக்கள் தொடங்குகின்றன. அங்கே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது, பிரார்த்தனை மற்றும் பாடல்களை பாடுவது போன்ற சடங்குகளை செய்கிறார்கள். பல பக்தர்கள் தியானம் மற்றும் ஆன்மீக சுத்திகரிப்புக்கான அடையாளமாக விரதங்களைக் கடைப்பிடிப்பது வழக்கம்.
மகா சிவராத்திரியை கொண்டாடும் தெற்காசிய நாடுகள்
நேபாளம்: இந்து நாடான நேபாளத்தில் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படும். காத்மாண்டுவில் உள்ள பழமையான பசுபதிநாத் கோயில் திருவிழாக்களின் மைய புள்ளியாக உள்ளது. இந்த கோவிலுக்கு உலகெங்கிலிருந்தும் பக்தர்கள் குவிவதுண்டு. மகா சிவராத்திரி இரவு முழுவதும், கலைஞர்கள் பல்வேறு பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மொரிஷியஸ்: கணிசமான இந்து சமூகத்தைக் கொண்ட பன்முக கலாச்சார தேசமான மொரிஷியஸில், இந்நாளை, கலாச்சார ஒற்றுமை மற்றும் மத பக்தியை வளர்க்கும் விதமாக பொது விடுமுறையாக அறிவித்துள்ளனர். தாய்லாந்து மற்றும் மலேசியா: இங்கு, மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் பௌத்த மற்றும் இந்து நடைமுறைகளின் கலவையாக கொண்டாடப்படுகிறது. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தமிழ் இந்து சமூகங்கள், சிவபெருமானுக்கு பயபக்தியுடன் ஒருங்கிணைத்து விழா எடுக்கிறார்கள்.