Page Loader
தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல் 

தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல் 

எழுதியவர் Sindhuja SM
Mar 18, 2024
07:26 am

செய்தி முன்னோட்டம்

'லாட்டரி மன்னன்' சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது. சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் மூலம் யார் வேண்டுமானாலும் பெயரை வெளியிடாமல் அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற நன்கொடைகளை வழங்க முடியும். இந்த திட்டம் கருப்பு பணத்தை ஒழிக்க இயற்றப்பட்டது என்று பாஜக கட்சி கூறி வரும் நிலையில், இந்த திட்டம் மூலம் பெரும் நிறுவனங்கள் கணக்கில் காட்டாத பணத்தை அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள விவரங்கள் தெரியவந்துள்ளது. இந்த திட்டம் மூலம் இருப்பதிலேயே அதிகமாக பாஜக ரூ.6,986.5 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.

இந்தியா 

தேர்தல் பத்திர விவாகரத்தில் அடிபடும் பெரும் கட்சிகளின் பெயர்கள் 

அதை தொடர்ந்து, ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ்(ரூ. 1,397 கோடி), காங்கிரஸ்(ரூ. 1,334 கோடி) மற்றும் பாரத ராஷ்டிர சமிதி (ரூ.1,322 கோடி) ஆகியவை பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடைகளை பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜேடி ரூ 944.5 கோடியை நன்கொடையை பெற்றுள்ளது. இதில் 6வது இடத்தில் உள்ள திமுக கட்சி ரூ.656.5 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு அதிகமாக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலில் 'லாட்டரி மன்னன்' சாண்டியாகோ மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் மொத்தம் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அந்த நிறுவனம் வழங்கிய 37% நன்கொடை, அதாவது ரூ.509 கோடி, திமுகவுக்கு வழங்கப்பட்டதாகும்.