Page Loader
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது
நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 22, 2024
03:07 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் முதற்கட்டமாக நேற்று வெளியான நிலையில், அடுத்தகட்ட வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் என தெரிவித்த சில நாட்களிலேயே, கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான், ராதிகா சரத்குமார் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவரை தவிர, 14 வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பால் கனகராஜ், கே.பி.ராமலிங்கம், ஏ.பி.முருகானந்தம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

embed

பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல்

#BREAKING | தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது#SunNews | #ElectionsWithSunNews | #BJP pic.twitter.com/MsBKg0GTcI— Sun News (@sunnewstamil) March 22, 2024