Page Loader
உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Mar 09, 2024
11:40 am

செய்தி முன்னோட்டம்

அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஜங்கிள் சஃபாரியையும், அருணாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். நேற்று அசாம் சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று காலை காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் ஜங்கிள் சஃபாரிக்கு சென்றார். அவர் முதலில் பூங்காவின் மத்திய கோஹோரா மலைத்தொடரில் யானை சஃபாரி செய்தார். பின்னர் வனத்துறை அதிகாரிகளுடன் அதே எல்லையில் ஜீப்பில் சஃபாரி செய்தார். "இன்று காலை நான் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காக்கு சென்றேன். பசுமையான இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம், கம்பீரமான ஒரு கொம்பு காண்டாமிருகம் உட்பட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார்.

அசாம்

வடகிழக்கு மாநிலங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் 

அதன் பிறகு, அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் நடந்த 'விக்சித் பாரத் விக்சித் வடகிழக்கு' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சேலா சுரங்கப்பாதை என்பது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சேலா கணவாய் வழியாக தவாங்கை இணைக்கும் ஒரு பொறியியல் அதிசயமாகும். சுமார் ரூ. 825 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை, நாட்டின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் அடிக்கல்லை பிரதமர் மோடி 2019ல் நாட்டினார். மேலும், இன்று நடந்த நிகழ்ச்சியில், அவர் ரூ.10,000 கோடி மதிப்பிலான UNNATI திட்டத்தையும், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ரூ.55,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.