STEAG: புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இராணுவத்தில் சிறப்பு பிரிவு அறிமுகம்
STEAG என்பது வயர்ட் மற்றும் வயர்லெஸ் அமைப்புகளில் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நாற்றங்காலாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு, 5ஜி, 6ஜி, மெஷின் லேர்னிங் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட எதிர்கால தொழில்நுட்பங்களை ராணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்த இந்திய ராணுவம் புதிய தொழில்நுட்ப பிரிவை உருவாக்கியுள்ளது. ராணுவ செயல்பாடுகளின் போது அலகுகள் மற்றும் அமைப்புகளுக்கு தடையற்ற தகவல்தொடர்பு ஆதரவை வழங்குவதற்கு புதிய உபகரணங்களை உருவாக்குவது, நவீனகால யுத்தத்திற்கு அவசியமாகிறது. அதனை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த புதிய STEAG அமைப்பு. STEAG என்பது Signals Technology Evaluation and Adaptation Group என்று அழைக்கப்படுகிறது. STEAG இராணுவத்தின் சிக்னல்கள் இயக்குநரகத்தின் கீழ் வருகிறது மற்றும் ஒரு கர்னல் தலைமையில் செயல்படும்.
சிக்னல்கள் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் தழுவல் குழு
எதிர்கால தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டை மேற்கொள்ள இது பணிக்கப்பட்டுள்ளது. "தொழில்நுட்பத்தில் இத்தகைய முன்னேற்றங்களை உள்வாங்க, இந்திய இராணுவம் இந்த தொழில்நுட்பம் சார்ந்த STEAG பிரிவை எழுப்பியுள்ளது. இது டிஜிட்டல் களத்தில் அதன் திறன்களை மேம்படுத்தும்." என ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். மின்னணு பரிமாற்றங்கள், மொபைல் தொடர்புகள், மென்பொருள் வரையறுக்கப்பட்ட ரேடியோக்கள், மின்னணு வார்ஃபேர் (EW) அமைப்புகள், 5G மற்றும் 6G நெட்வொர்க்குகள், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், STEAG உதவியாக இருக்கும்.