"டெஸ்ட் மேட்ச் இருப்பதால் நீ திரும்பிச் செல்ல வேண்டும்": அஸ்வினின் தாயார்
இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர், அஸ்வின் ரவிச்சந்திரனின் தாய் கடந்த டெஸ்ட் போட்டியின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது தாயை சந்தித்தபோது நடந்தவைகளை சமீபத்தில் அஸ்வின் தெரிவித்தார். மேலும், 100 டெஸ்ட் போட்டிகளை வெற்றிகரமாக கடந்த தனது கிரிக்கெட் பயணத்தில், தனது குடும்பத்தின் ஆதரவை அவர் நடனறியுணர்வுடன் பாராட்டினார். ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தின் போது, அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு, 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் என்ற சாதனையை புரிந்த சில மணி நேரத்திலேயே, அஸ்வினின் தாயார் திடீர் உடலநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து சென்னைக்குத் திரும்பினார்.
மருத்துமனையில் அஸ்வினின் தாயார் கூறியது என்ன?
அந்த தருணங்களை பற்றி, அஸ்வின், ESPNcricinfo -விடம் பகிர்ந்துகொண்டார். "நான் ஏர்போர்ட்டிலிருந்து நேரே மருத்துவமனைக்குச் சென்றபோது, என் அம்மா சுயநினைவை விட்டு நழுவிக்கொண்டிருந்தார். எனினும் அவர் என்னிடம் முதலில் கேட்டது, 'ஏன் வந்தாய்?' எனக்கூறி மயங்கிவிட்டார். அடுத்த முறை அவள் சுயநினைவு திரும்பிய போது,'டெஸ்ட் மேட்ச் நடப்பதால் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,' என்று கூறினார்". அஸ்வின் தனது பெற்றோரின் ஒவ்வொரு முடிவும், எப்படி அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது என்பதை நினைவுகூர்ந்தார். இது ஒரு கூட்டுக் கனவு என்றும் அவர் தெரிவித்தார்.