Page Loader
நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து

நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து

எழுதியவர் Sindhuja SM
Mar 13, 2024
10:56 am

செய்தி முன்னோட்டம்

பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து 'ஐந்து-கண்கள்' என்ற உளவுத்துறை கூட்டணியை நடத்தி வருகிறது. நிஜ்ஜார் வழக்கு தொடர்பாக கனடாவிடம் இருந்து அந்த உளவுத்துறைக்கு சில முக்கிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது, அவர், இந்தியாவின் மீது குற்றம்சாட்டும் கனடாவின் ஆதாரங்கள் சந்தேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கனடா 

இந்தியாவுக்கு எதிரான  கனடாவின் குற்றசாட்டுகள் 

நியூசிலாந்து தனது நிலைப்பாட்டை இந்தியாவிடம் தெரிவித்துவிட்டதா என்று அவரிடம் கேட்டதற்கு, அவர் "நியூசிலாந்தின் முந்தைய அரசாங்கம் முதன்மையாக நிர்வகித்து வந்த இந்த விஷயத்தை நாங்கள் கையாள்வதில்லை" என்று தெரிவித்துவிட்டார். இந்தியாவுக்கு எதிரான கனடாவின் குற்றசாட்டுகளை சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள முதல் முக்கிய தலைவர் இவர் ஆவார். காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது. இதனால், இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளன.