மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா
பாஜகவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் இன்று காலை தனது ராஜினாமாவை அறிவித்தார். மேலும், பாஜக தேசிய கூட்டணியில் இருந்து தனது ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியை விலக்கி கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். பசுபதி பராஸின் மருமகன் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து கொண்டதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பசுபதி பராஸிடம் இருந்து பிரிந்த அவரது மருமகனும் எல்ஜேபி(ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வானின் கட்சியுடன் நேற்று பாஜக கூட்டணியில் இணைந்தது. "நான் எனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தொகுதி பங்கீட்டில் எங்கள் கட்சிக்கு அநீதி நடந்துள்ளது" என்று பசுபதி பராஸ் கூறியுள்ளார்.