NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை 

    இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 05, 2024
    04:53 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல் - லெபனான் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.

    "தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் இருப்பவர்கள், இஸ்ரேலுக்குள் இருக்கும் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியர்கள் அனைவரின் பாதுகாப்பையும் இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்று இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    பலியானவர் கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த பட்னிபின் மேக்ஸ்வெல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

     இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தின் பதிவு

    📢*IMPORTANT ADVISORY FOR INDIAN NATIONALS IN ISRAEL* pic.twitter.com/Fshw7zcbmj

    — India in Israel (@indemtel) March 5, 2024

    இஸ்ரேல்

    இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அறிக்கை 

    இஸ்ரேல்- ஹமாஸ் போரில் ஏற்படும் முதல் இந்திய உயிரிழப்பு இதுவாகும்.

    கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் நேற்று வடக்கு இஸ்ரேலின் மார்கலியோட்டில் நடந்த ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார்,

    ஹிஸ்புல்லா அமைப்பின் "கோழைத்தனமான" தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த மேலும் இருவர் காயமடைந்ததாக இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் இன்று காலை வெளியான ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஏவுகணை தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மூவரும் ஒரு பழத்தோட்டத்தை பயிரிட்டுக் கொண்டிருந்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதாக இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட பதிவு 

    We are deeply shocked and saddened by the death of one Indian national and the injury of two others due to a cowardly terror attack launched by Shia Terror organization Hezbollah, on peaceful agriculture workers who were cultivating an orchard at the northern village of Margaliot…

    — Israel in India (@IsraelinIndia) March 5, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இந்தியா
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உலகம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    இஸ்ரேல்

    இஸ்ரேலிய உளவுத்துறை  ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான்  ஈரான்
    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய 4 கிமீ நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இந்தியா

    அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி? அமெரிக்கா
    இந்தியாவில் அறிமுகமானது 2024 கவாஸாகி Z900 மோட்டார் பைக்  கவாஸாகி
    இந்தியாவில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ எக்ஸ்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் ஏமன்
    ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு இஸ்ரேல்
    காசா போர் நிறுத்தம் கோரும் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது  ஐநா சபை
    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை ஜோ பைடன்

    உலகம்

    தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர் சீனா
    அமெரிக்காவில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்: 2 வாரங்களில் 6 கோவில்கள் தாக்கப்பட்டதாக தகவல்  அமெரிக்கா
    மெக்சிகோவில் திறக்கப்பட்டது அந்நாட்டின் முதல் ராமர் கோவில்  மெக்சிகோ
    கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோய் பரவலுக்கு வாய்ப்பு: WHO எச்சரிக்கை  உலக சுகாதார நிறுவனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025