ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை
சமீபத்திய ஹுருன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் உலகளாவிய பணக்காரர் பட்டியலின்படி, முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான பில்லியனர்களுடன், ஆசிய தலைநகர் என்ற பட்டத்தை மும்பை பெற்றுள்ளது. இது வரை இந்த இடத்தை பெற்றிருந்த பெய்ஜிங்கை முந்தியுள்ளது மும்பை நகரம். இது இந்தியாவிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். ஆசியாவிலேயே செல்வத்தை உருவாக்குவதில் மும்பையை முன்னணியில் உள்ளது. இந்தியாவின் நிதி மையமான மும்பை, சமீபத்திய ஹுருன் பணக்காரர் பட்டியலின்படி, ஆசிய தரவரிசையில் பெய்ஜிங் (91) மற்றும் ஷாங்காய் (87) ஆகிய இரண்டையும் விஞ்சி, 92 பில்லியனர்களுடன் முன்னேறியுள்ளது. 119 பில்லியனர்களைக் கொண்ட நகரங்களுக்கான உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் நியூயார்க் முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டன் 97 பேருடன் உள்ளது.
பில்லியனர் தலைநகர் மும்பை
உலகளவில் அதிகரித்துள்ள பில்லியனர்கள்
உலகளவில், இப்போது 3,279 பில்லியனர்கள் உள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 5% அதிகமாகும். சீனா இன்னும் 814 பில்லியனர்களுடன் உலக நாடுகள் தரவரிசையில் முன்னணியில் இருந்தாலும், முந்தைய ஆண்டை விட 155 பில்லியனர்கள் இழந்து குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளது. 800 பில்லியனர்களுடன் அமெரிக்கா பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தரவரிசையில், இந்தியா 271 பில்லியனர்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. "சமீப ஆண்டுகளில் சீனாவில் செல்வ உருவாக்கம் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் புதுப்பிக்கத்தக்க பொருட்களில் இருந்து பில்லியனர்களின் செல்வத்தில் சரிவு காணப்படுகிறது". "அமெரிக்காவில், செல்வந்தர்களின் அதிகரிப்புக்கு செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகித்தது"என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.