2024 உலக அழகி இறுதிப்போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சினி ஷெட்டி
செய்தி முன்னோட்டம்
இந்த வாரம் நடைபெறவுள்ள 71வது உலக அழகி போட்டியில், இந்தியாவின் பிரதிநிதியான சினி ஷெட்டி, முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து, ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்தின் முதல் 5 இடங்களில் உள்ளார்.
உலக அழகி பட்டத்திற்காக போட்டியிடும் 112 போட்டியாளர்களில், 22 வயதான சினி ஷெட்டி சமீபத்தில், சிறந்த வடிவமைப்பாளர் உடைக்கான சுற்றை வென்றுள்ளார்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு, மிஸ் வேர்ல்ட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த விழாவின் 71வது பதிப்பின் தயாரிப்புத் தலைவராக எண்டெமோல்ஷைன் இந்தியா உள்ளது. பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கிய இந்த மாபெரும் நிகழ்வு, சனிக்கிழமை (மார்ச் 9) ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், சினி ஷெட்டியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பின்னணி
சினி ஷெட்டியின் ஆரம்பகால வாழ்க்கை
மும்பையைச் சேர்ந்த சினி ஷெட்டியின் குடும்ப வேர்கள், கர்நாடகா மாநிலம் மங்களூரு ஆகும். அவர் கணக்கியல் மற்றும் நிதியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்தார் மற்றும் பட்டய நிதி ஆய்வாளர் (CFA) தகுதியை பெற்றுள்ளார்.
சினி ஷெட்டி ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர். தனது நான்கு வயதில் இருந்து இதற்கான பயிற்சி பெற்றுவருகிறார். 14 வயதில் அரகேற்றத்தை முடித்துள்ளார்.
சினி ஷெட்டி, 2022 ஆம் ஆண்டில், ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றிபெற்றார்.
அதோடு அந்த போட்டியில், டைம்ஸ் மிஸ் பாடி பியூட்டிஃபுல் மற்றும் என்ஐஎஃப்டி மிஸ் டேலண்ட் ஆகிய பட்டங்களையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இன்ஸ்பிரஷனாக, மிஸ் வேர்ல்ட் (2000) பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்-ai கருதுகிறார் சினி ஷெட்டி.