சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற 7 இந்தியர்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற தங்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது.
அவர்கள் உதவி கோரும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குளிர்கால இராணுவ உடைகளை அணிந்த 7 பேர் ஒரு வீடியோவை பதிவு செய்து உதவி கோரியுள்ளனர்.
அந்த வீடியோவில் அவர்கள் அடைத்து வைத்த ஒரு அழுக்கு அறைக்குள் நிற்பது போல் தெரிகிறது.
டிசம்பர் 27அன்று ரஷ்யாவில் புத்தாண்டை கொண்ட அவர்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
90 நாட்களுக்கு செல்லுபடியாகும் விசா அவர்களிடம் இருந்தது என்றும், ஆனால் அவர்கள் ரஷ்யாவை அடுத்து பெலாரஸுக்கு பயணம் செய்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ரஷ்யா
இராணுவ ஆவணங்களில் கையொப்பமிட வைத்த ரஷ்ய அதிகாரிகள்
"ஒரு ஏஜென்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார் ... அங்கு செல்ல விசா தேவை என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் விசா இல்லாமல் பெலாரஸுக்குச் சென்றபோது அந்த ஏஜென்ட் எங்களிடம் அதிக பணம் கேட்டார். பின்னர் எங்களைக் கைவிட்டுவிட்டார். போலீசார் எங்களைப் பிடித்து ரஷ்யாவிடம் ஒப்படைத்தனர். ரஷ்ய அதிகாரிகள் எங்களை இராணுவ ஆவணங்களில் கையொப்பமிட வைத்தனர்" என்று ஹர்ஷ் என்ற இளைஞர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
"இப்போது அவர்கள்(ரஷ்யா) உக்ரைனுக்கு எதிரான போரில் எங்களை சண்டையிட சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்." என்றும் ஹர்ஷ் தெரிவித்துள்ளார்.
ஹர்ஷின் குடும்பத்தினரை அவர்களை மீட்டு தருமாறு இந்திய அரசிடம் கோரியுள்ளனர்.