Page Loader
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ வைரல் 

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ வைரல் 

எழுதியவர் Sindhuja SM
Mar 09, 2024
11:23 am

செய்தி முன்னோட்டம்

கனடாவில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார், ஜூன் 18, 2023 அன்று மாலை பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். CBS நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும் கனடிய புலனாய்வு ஆவணத் தொடரான ​​'The Fifth Estate' இலிருந்து CBS செய்திகள் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ பெற்றன. இந்த வீடியோ காட்சிகள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களால் சரிபார்க்கப்பட்டதாக CBS செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது புதிதாக அந்த வீடியோ வெளியாகி உள்ளதால் அது வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ