காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அதில் இருந்து அமெரிக்கா விலகியது. அதனையடுத்து, அமெரிக்காவின் இந்த செயலால் இஸ்ரேல் கோபடமடைந்தது. போர் தொடங்கியதில் இருந்து நட்பு நாடுகளாக செயல்பட்டு வரும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட இந்த பெரும் மோதலால், இஸ்ரேலிய உயர்மட்டக் குழுவின் வாஷிங்டன் பயணத்தை இஸ்ரேல் ரத்து செய்தது. ஹமாஸ் கைதிகளை விடுவிப்பதற்கான போர்நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பை நடப்பதற்கு அமெரிக்கா அனுமதித்ததால் "கொள்கை நிலையிலிருந்து" அமெரிக்கா "பின்வாங்குகிறது" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டினார்.
இஸ்ரேல்-அமெரிக்க உறவுகள் சேதம்
இதற்கிடையில், காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்களை திரும்பப் பெற்று, பாலத்தீன கைதிகளை திருப்பி அனுப்பினால் மட்டுமே போர்நிறுத்தத்தை எட்டுவோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இந்த பிரச்சனைகளால் ஜோ பைடனுக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான உறவுகள் திங்களன்று மிகவும் சரிந்தன. ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்த காசா போர்நிறுத்த தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அனுமதித்தததால் இஸ்ரேலிய பிரதமர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், தெற்கு காசா நகரமான ரஃபாவில் இஸ்ரேலின் அச்சுறுத்தல் தாக்குதல் குறித்து விவாதிக்க வாஷிங்டனுக்கு செல்ல இருந்த மூத்த பிரதிநிதிகளின் குழு இந்த வாரம் அங்கு செல்ல வேண்டாம் என்று நெதன்யாகு உத்தரவிட்டார்.