ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி
ஐநா பொதுச் சபையில் கருத்து தெரிவிக்கும் போது பாகிஸ்தான் தூதுவர், அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இஸ்லாமிய-வெறுப்பு கண்ணோட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ஐநாவில் தாக்கல் செய்தது. அந்த தீர்மானத்தை 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துவிட்டது என்பதும் குறிபிடத்தக்கது. இந்நிலையில், இஸ்லாமிய-வெறுப்பு கண்ணோட்டம் குறித்து பேசிய பாகிஸ்தான் தூதுவர் முனீர் அக்ரம், இந்தியா புதிதாக அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டார். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்நத இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்குகிறது.
"உடைந்த ரெகார்ட்டு": பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா
அண்டை நாட்டில் துப்புறுத்தப்படும் சிறுபான்மையினர்களான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், இந்த சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்கள் பயனடைய முடியாது. இந்நிலையில், இந்த சட்டத்தை பாகிஸ்தான் தூதுவர் குறிப்பிட்டதற்கு பதிலடி கொடுத்த இந்திய தூதுவர் ருசிரா காம்போஜ, "எனது நாடு தொடர்பான விஷயங்களில் இந்தக் குழுவின் வரையறுக்கப்பட்ட மற்றும் தவறான கண்ணோட்டத்தைக் காண்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. இந்த தூதுக்குழு(பாகிஸ்தான்) உடைந்த ரெகார்ட்டை போலவே சொன்னதையே சொல்லி கொண்டிருக்கிறது. உலகம் முன்னேறும் போது அவர்களது பார்வை மட்டும் சோகமாக அப்படியே தேங்கி நிற்கிறது." என்று கூறியுள்ளார்.