
முதன்முறையாக மனித மூளைக்கு சிப்பை பொருத்தி எலான் மஸ்க்கின் நியூராலிங்க் சாதனை
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக ஒரு மனித மூளைக்கு உள்ளே சிப் வைத்து சாதனை புரிந்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த நபர் நன்றாக குணமடைந்து வருகிறார் என்று இந்த நியூரோடெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் X இல் தெரிவித்தார்.
"ஆரம்ப முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரான் ஸ்பைக் கண்டறிதலைக் காட்டுகின்றன" என்று மஸ்க் மேலும் குறிப்பிட்டார்.
ஸ்பைக்குகள் என்பது நியூரான்களின் செயல்பாடு ஆகும் - மூளை மற்றும் உடல் முழுவதும் தகவல்களை அனுப்ப மின்/வேதியியல் சமிக்ஞைகளைப் பயன்படுத்தும் செல்கள்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) கடந்த ஆண்டு நியூராலிங்கிற்கு அதன் முதல் மனித சோதனையை நடத்த பச்சைக்கொடி காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
நியூராலிங்க் செய்த சாதனை
#WowNews | எலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’ நிறுவனம் சாதனை!#SunNews | @elonmusk | @neuralink pic.twitter.com/O5dQbwgK9z
— Sun News (@sunnewstamil) January 30, 2024