LOADING...

26 Sep 2025


பிசிசிஐ மேல்முறையீடு: சூர்யகுமார் யாதவ் மீதான ஐசிசி அபராதத்தை எதிர்த்து நடவடிக்கை

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி விதித்த 30% போட்டி ஊதிய அபராதத்தை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேல்முறையீடு செய்துள்ளது.

சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயம்: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கும் பிரதான நடவடிக்கையாக, வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் உட்பட பிரிட்டனில் உள்ள அனைத்துக் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கட்டாய டிஜிட்டல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவுக்கு போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு

இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பேசியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அவருடைய போட்டி ஊதியத்தில் 30% அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றுச் சாதனை: 400 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து ஏ டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி

லக்னோவில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா ஏ அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

மருந்துக்குத் தண்ணீர் கேட்டபோது அமெரிக்க அதிகாரிகள் பனிக்கட்டி வழங்கியதாக நாடு கடத்தப்பட்ட சீக்கிய மூதாட்டி புகார்

அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 73 வயது சீக்கிய மூதாட்டி ஹர்ஜித் கவுர், தான் நாடு கடத்தப்பட்டபோது அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டதாகப் புகாரளித்துள்ளார்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $702.57 பில்லியனாக குறைவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $396 மில்லியன் குறைந்து, செப்டம்பர் 19, 2025 நிலவரப்படி, அதன் மொத்த மதிப்பு $702.57 பில்லியனாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸ்-மெட்டாவின் ₹855 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் AI கூட்டு முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இடையேயான கூட்டு முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

துப்பாக்கி சைகைக்கும் அதற்கும் தொடர்பில்லை; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஐசிசியிடம் விளக்கம்

ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியின்போது தான் செய்த கொண்டாட்டம், அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று நடைபெற்ற ஐசிசி விசாரணையில் விளக்கம் அளித்தார்.

'காந்தாரா: அத்தியாயம் 1' திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் செர்டிபிகேட் என்ன தெரியுமா?

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) 'காந்தாரா: எ லெஜண்ட் - அத்தியாயம் 1' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி அல்லது வன்முறை காட்சிகளில் எந்த வெட்டுக்களும் இல்லாமல் அனுமதி அளித்துள்ளதாக பாலிவுட் ஹங்காமா தெரிவித்துள்ளது.

வணிகர்களின் ஜிஎஸ்டி வரி குறைப்புகளை கண்காணிக்கும் மத்திய அரசு

இந்திய அரசாங்கம் சமீபத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்புகளை நுகர்வோருக்கு எவ்வாறு கடத்துவது என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

திருமணமாகாதவர்களுக்கு அனுமதியில்லை; பேனர் வைத்து டிரெண்டான ஓசூர் பூங்கா; பின்னணி என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பொதுப் பூங்கா ஒன்றில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் குறிப்பாக 2கே கிட்ஸ் வரம்பு மீறி அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, பூங்கா நிர்வாகம் திருமணமாகாதவர்களுக்கு அனுமதி இல்லை என பேனர் வைத்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

பூம்புகார் கடலுக்கு அடியில் பண்டைய கட்டிடங்கள் கண்டுபிடிப்பு? ஏழாவது நாளாகத் தொடரும் தொல்லியல் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கடலுக்கு அடியில் பண்டைய தமிழர்களின் வரலாற்றை ஆராயும் தொல்லியல் துறை ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன.

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால்... தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பாக துல்கர் சல்மான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் தனது உயர் ரக கார்களில் ஒன்றை பறிமுதல் செய்ய சுங்கத் துறை எடுத்த முடிவை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

டிசம்பர் 21 இல் எஸ்ஐ தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1,299 சார்பு ஆய்வாளர் (எஸ்ஐ) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, டிசம்பர் 21, 2025 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அறிவித்துள்ளது.

மோடி புடின் பேச்சு குறித்த நேட்டோ தலைவரின் கருத்து பொய்; இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைத் தொடர்புகொண்டு உக்ரைன் போர் உத்தி குறித்து விளக்கம் கேட்கும்படி பிரதமர் நரேந்திர மோடியைத் தூண்டியது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே கூறிய கூற்றை, இந்தியா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

10,000 விற்பனை மைல்கல்லைக் குறிக்கும் வகையில் G 310 RR லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், இந்தியாவில் G 310 RR மோட்டார்சைக்கிளின் 10,000 யூனிட் விற்பனை மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், G 310 RR லிமிடெட் எடிஷனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

4 நாட்களில் மாருதி சுசுகி 80,000 கார்களை விற்பனை செய்துள்ளது

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி , சமீபத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்புகளை தொடர்ந்து விற்பனையில் மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டுள்ளது.

லடாக் வன்முறையைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட அமைதியான போராட்டம் வன்முறையாக மாறிய சில நாட்களுக்குப் பிறகு, காலநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

தங்கள் ஸ்டேட்டஸை யார் reshare செய்யலாம் என இப்போது Whatsapp பயனர்கள் கட்டுப்படுத்தலாம்

பயனர்களுக்கு அவர்களின் status update-கள் மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும் புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது.

டிரம்பின் மருந்து வரிகள் ஜெனரிக் மருந்துகளுக்கு இல்லை, ஆனாலும் இந்திய நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொள்கின்றன

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அக்டோபர் 1 முதல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் "எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற" மருந்துகளுக்கும் 100% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்தால் ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வு; ரசிகர்கள் வருகை மற்றும் வருவாய் குறையும் அபாயம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால், இந்தியன் பிரீமியர் லீக் (ஜிஎஸ்டிஐபிஎல்) போட்டிகளின் டிக்கெட் விலைகள் உயரவுள்ளன.

'ஜெய் ஹனுமான்' படத்திற்கு எதற்காக ஓகே சொன்னேன் தெரியுமா?: ரிஷப் ஷெட்டி விளக்கம்

தற்போது 'காந்தாரா: அத்தியாயம் 1' படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, தனது அடுத்த படமான 'ஜெய் ஹனுமான்' பற்றிய அப்டேட்டை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

சீனாவின் ரோபோட்டிக்ஸ் புரட்சி: உலகின் மொத்த ரோபோக்களை விடவும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களுடன் சாதனை

சீனா தனது உற்பத்தித் துறையில் 20 லட்சத்திற்கும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் மூலம் உலகளவில் தொழிற்சாலை ரோபோக்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

பிரதமர் மோடி நாளை BSNL-இன் 'சுதேசி' 4ஜி நெட்வொர்க்கை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் 'சுதேசி' 4ஜி நெட்வொர்க்கைத் தொடங்கி வைப்பார்.

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான கடைகள் மூடல்; ஊழியர்கள் பணி நீக்கம்; காரணம் என்ன?

ஸ்டார்பக்ஸ் நிறுவனம், நிதி ஸ்திரத்தன்மையை அடைவதையும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

திடீரென எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்த ரஷ்யா: இது இந்தியாவை எவ்வாறு பாதிக்கிறது?

ஒரு பெரிய முன்னேற்றத்தில், ரஷ்யா டீசல் ஏற்றுமதிக்கு பகுதியளவு தடை விதித்து அறிவித்துள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதி வரை அனைத்து நாடுகளுக்கும் பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏற்கனவே உள்ள தடையை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து வரவிருக்கும் பண்டிகை காலம் 200,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கணிப்பு

இந்தியாவின் வரவிருக்கும் பண்டிகை காலம் பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் திறமை தீர்வுகள் வழங்குநரான NLB சேவைகள் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐசிசி விசாரணையில் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன? விவரங்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விசாரணையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 'தான் குற்றவாளி அல்ல' என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரின் உத்தி குறித்து ரஷ்யாவிடம் இந்தியா விளக்கம் கேட்டதாக நேட்டோ தலைவர் தகவல்

அமெரிக்கா விதித்துள்ள வரிக் கட்டணங்களால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, உக்ரைன் போரின் வியூகம் குறித்து ரஷ்யாவிடம் விளக்கம் கேட்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே வியாழக்கிழமை (செப்டம்பர் 25) பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உட்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு இன்று ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா சபைக்கு செல்ல ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து பறந்த இஸ்ரேல் பிரதமரின் ஜெட்; இதான் காரணமா?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நீண்ட நெடிய பாதையை தேர்வு செய்து பயணம் செய்தார்.

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியை ஒரு மணி நேரம் காக்க வைத்து சந்தித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

சவரனுக்கு ₹320 உயர்வு; இன்றைய (செப்டம்பர் 26) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) உயர்வைச் சந்தித்துள்ளது.

ஆசிய கோப்பை: இன்று இந்தியா - இலங்கை மோதல்; இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில், இன்று இரவு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன.

டிக்டாக் பாணியில் AI வீடியோக்களை வழங்கும் Vibes-ஐ அறிமுகம் செய்தது மெட்டா

மெட்டா நிறுவனம் "Vibes" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

OpenAI இன் ChatGPT 'Pulse' அறிமுகம்: இனி கேள்விகளுக்கு மட்டும் பதிலல்ல; ஒரு PA போல செயல்படும்!

செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் விதமாக, OpenAI தனது ChatGPT தளத்தில் 'Pulse' என்ற புதிய தனிப்பயனாக்கப்பட்ட உதவியாளர்(Personal Assistant) அம்சத்தை முன்னோட்டமாக தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது டிக்டாக்: ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்து என டிரம்ப் தகவல்

சீனாவை சேர்ந்த பிரபலமான வீடியோ செயலியான டிக்டாக் (TikTok) நிறுவனம் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மருந்துகளுக்கு 100%, சமையலறை அலமாரிகளுக்கு 50%: டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை மற்றொரு சுற்று இறக்குமதி வரிகளை அறிவித்தார். மருந்துகள் முதல் சமையலறை அலமாரிகள் வரையிலான பொருட்களுக்கு 100% வரை வரிகளை விதிப்பதாக அறிவித்தார்.

25 Sep 2025


உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புகார் குறித்து சூர்யகுமார் யாதவ் ஐசிசி விசாரணையில் ஆஜராகி விளக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன் வியாழன் (செப்டம்பர் 25) அன்று நடைபெற்ற விசாரணையில் பங்கேற்றார்.

அரசு ஊழியர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்ய தயாராகும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்?

அமெரிக்காவில் அடுத்த வாரம் அரசாங்கம் மூடப்படக்கூடிய சூழ்நிலையில், வெள்ளை மாளிகை கூட்டாட்சி நிறுவனங்களை ஒட்டுமொத்தப் பணிநீக்கங்களுக்குத் (Mass Firings) திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

முதல்வர் கேட்டும் இடம் தர மறுத்த விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி

பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விப்ரோ நிறுவனத்தின் சர்பூர் வளாகத்தின் நிலத்தை பொது வாகனப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த அனுமதி கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கையை, விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நிராகரித்துள்ளார்.

ரிஷப் பண்ட் இந்திய அணிக்குத் திரும்புவது எப்போது? தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் சொன்னது இதுதான்

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், காயம் காரணமாக தொடர்ந்து அணியில் இடம்பெறாத நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று இந்தியத் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து, நாகார்ஜுனாவும் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா அக்கினேனி தனது ஆளுமை உரிமைகளை பாதுகாக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத்தை பின்பற்றி எல்லைப் பாதுகாப்பில் உள்நாட்டு நாய்களை இணைத்த பிஎஸ்எஃப்

சுயசார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) முன்முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தனது எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு இந்திய நாய் இனங்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது.

நடிகர் சல்மான் கானை 7 வருடங்களாக பாதித்துள்ள கொடிய நரம்பு கோளாறு என்ன தெரியுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவின் புதிய டாக் ஷோவான டூ மச்சில் trigeminal neuralgia (TN) உடனான தனது போராட்டத்தைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

லடாக் போராட்டங்களுக்கு மத்தியில் சமூக சேவகர் சோனம் வாங்க்சுக் தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமம் ரத்து

லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் நிறுவிய தொண்டு நிறுவனமான மாணவர் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம் (SECMOL) மீதான வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) உரிமத்தை மத்திய அரசு வியாழக்கிழமை மாலை ரத்து செய்தது.

உடனடி Forex கார்டு விநியோகத்திற்காக பிளிங்கிட், தாமஸ் குக் இணைந்து செயல்பட திட்டம்

தாமஸ் குக் இந்தியா, "borderless multicurrency cards" வீட்டு வாசலுக்கு டெலிவரி செய்ய, விரைவான வர்த்தக தளமான பிளிங்கிட் உடன் இணைந்துள்ளது.

சாட்ஜிபிடியில் விளம்பரங்களை வெளியிட ஓபன்ஏஐ திட்டம்; வருவாயைப் பெருக்க புதிய முயற்சிகள்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஓபன்ஏஐ, தனது வருவாய் ஈட்டும் உத்திகளைப் பன்முகப்படுத்த, பிரத்யேகமான உள் விளம்பரக் குழுவை அமைப்பதில் மும்முரம் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரத் NCAP-இல் மாருதி சுசுகி இன்விக்டோ 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது

மாருதி சுஸுகியின் பிரீமியம் MPV, இன்விக்டோ, பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தால் (பாரத் NCAP) ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

இந்தியா பங்களாதேஷ் உறவு மோசமானதற்கு காரணம் இதுதான்; முகமது யூனுஸ் குற்றச்சாட்டு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த கடந்த ஆண்டு நடந்த மக்கள் போராட்டங்கள் குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்ததால்,இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

லிபியா தேர்தல் நிதி வழக்கில் முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு தேர்தல் நிதிச் சதி வழக்கில் பாரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இங்கிலாந்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்; 2029ஆம் ஆண்டுக்குள் 800 தொடக்கப் பள்ளிகள் மூடப்படலாம்

கல்வி கொள்கை நிறுவனத்தின் புதிய ஆய்வில், இங்கிலாந்தின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் 2029 ஆம் ஆண்டுக்குள் சுமார் 800 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் எதிரொலி: சுஸூகியின் ஹயபூசா பைக் விலை ₹1.16 லட்சம் அதிகரிப்பு

350 சிசிக்கு மேற்பட்ட என்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது பிரீமியம் பைக்குகளின் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளது.

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு; வரி தணிக்கை அறிக்கை காலக்கெடு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), 2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை (TARs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

'ரயிலில் உணவு' சேவையை புதிய அம்சங்களுடன் மேம்படுத்துகிறது ஸ்விக்கி

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஸ்விக்கி தனது 'ரயிலில் உணவு' சேவையில் பெரிய அளவிலான மேம்பாடுகளை அறிவித்துள்ளது.

முழுவதும் இந்திய நிறுவனமாக மாறும் நத்திங்கின் சிஎம்எஃப்; உற்பத்திக்காக ரூ.837 கோடி முதலீடு

லண்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் (Nothing), இந்தியாவில் தனது துணை நிறுவனமான சிஎம்எஃப் (CMF) நிறுவனத்தை ஒரு சுதந்திரமான நிறுவனமாக நிறுவ திட்டமிட்டுள்ளது.

இந்தியர்களின் பயண தேவை 18% அதிகரிப்பு; ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து தான் அதிகம் விரும்பும் இடங்கள்

இந்தியாவில் பண்டிகை காலம் பயணத்தேவை மற்றும் விருப்பச் செலவினங்களில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.

97 தேஜாஸ் மார்க்-1ஏ ஜெட் விமானங்களுக்கு ₹62,370 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திட்டுள்ளது

97 தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை வாங்குவதற்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் ₹62,370 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

பாமக சட்டப்பேரவை தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி ராமதாஸ் அதிரடி

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் அடிப்படை விதிகள் மற்றும் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, அக்கட்சியின் மூத்த நிர்வாகியான ஜி.கே.மணி வகித்த பதவியைப் பறித்து உத்தரவிட்டுள்ளார்.

லடாக் போராட்டத்தின் மைய போராளி சோனம் வாங்சுக் மீது சிபிஐ கவனம் திரும்புகிறது

லடாக்கை சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் அவரது ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக் (HIAL) ஆகியோரை வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (FCRA) மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விசாரிக்க மத்திய புலனாய்வு பிரிவு (CBI) முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் விலை அக்டோபர் 17 அன்று வெளியீடு; 100 யூனிட்கள் மட்டும் விற்பனை

அதிக எதிர்பார்ப்புக்குள்ளான, செயல்திறனை மையமாகக் கொண்ட 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்ஸின் அதிகாரப்பூர்வ விலை விவரங்களை அக்டோபர் 17 அன்று இந்தியாவில் வெளியிட ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது.

நாய், பூனை கீறினாலும் ரேபிஸ் பரவுமா? அலெர்ட் மக்களே; மருத்துவர்கள் எச்சரிக்கை

ரேபிஸ் நோயால் ஏற்படும் மரணங்கள் கவனம் ஈர்த்து வரும் நிலையில், நாய் கடிப்பதன் மூலம் மட்டுமின்றி, அதன் கீறல்களின் மூலம் ஏற்படும் அபாயத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

ஐ.நா. சபையில் நடந்த சந்திப்பிற்கு பிறகு டிரம்ப் மீண்டும் பாக்., பிரதமரை சந்திக்கிறார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்திக்கவுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு; மூன்று தமிழக வீரர்களுக்கு இடம்

வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

60 வருட கால சேவைக்கு பின்னர் மிக்-21 போர் விமானங்கள் நாளை ஓய்வு பெறுகின்றன; அதன் சிறப்பம்சங்கள்

இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக 60 வருடங்களுக்கும் மேலாக திகழ்ந்த புகழ்பெற்ற ரஷ்ய தயாரிப்பான மிக்-21 (MiG-21) போர் விமானங்கள், இறுதியாக நாளை (செப்டம்பர் 26) இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெறுகின்றன.

போக்குவரத்து விதியை மீறினால் இனி உடனுக்குடன்... பெங்களூர் காவல்துறை புதிய முயற்சி

பெங்களூரில் போக்குவரத்து கண்காணிப்பு முற்றிலும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. டிரினிட்டி சர்க்கிளில் பெங்களூர் காவல்துறை, கார்ஸ் 24 நிறுவனத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் மின்னணுப் பதாகை (Billboard) ஒன்றை நிறுவியுள்ளது.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்று 5 மாவட்டங்கள், நாளை 4 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மொபைல் மட்டுமல்ல, அடுத்த ஆண்டு உங்கள் கணினியிலும் Android வருகிறது!

கூகிள் ஆண்ட்ராய்டை தனிநபர் கணினிகளுக்குக் கொண்டுவரத் தயாராக உள்ளது.

இந்தியாவில் புற்றுநோய் இறப்புகளுக்கு மார்பக புற்றுநோய் தான் முதன்மை காரணம்

இந்தியாவில் புற்றுநோய் இறப்புகளுக்கு மார்பகப் புற்றுநோயே முதன்மையான காரணம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பக்தர்கள் கூட்டத்தை நிர்வகிக்க இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐசிசிக்கு புகார்

துபாயில் நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிக்குப் பிறகு, இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான பதட்டங்கள் களத்தை விட்டு புதிய பரிமாணம் எடுத்துள்ளன.

சவரனுக்கு ₹720 குறைவு; இன்றைய (செப்டம்பர் 25) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (செப்டம்பர் 25) சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தியா முதல் முறையாக ரயில் ஏவுதளத்திலிருந்து அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியா தனது அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

லடாக் வன்முறைக்கு பாஜகவின் தவறான முடிவுகளும், வேலைவாய்ப்பு நெருக்கடியும் தான் கரணம்: சோனம் வாங்சுக்

லடாக்கில் நேற்று வெடித்த வன்முறை சம்பவங்களுக்கு, மத்திய பாஜக அரசின் தவறான முடிவுகளும், இளைஞர்களிடையே நிலவும் கடுமையான வேலைவாய்ப்பு நெருக்கடியுமே முக்கியக் காரணம் என்று பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் குழந்தைகள் பாலியல் குற்றவாளியை தேடிக்கொன்ற இந்தியர் கைது

நீதிமன்ற ஆவணங்களின்படி, கலிபோர்னியாவை சேர்ந்த இந்தியர் ஒருவர், பொது பாலியல் குற்றவாளி பதிவேட்டில் உள்ளவரின் பெயரை வைத்து தேடிக்கண்டுபிடித்து, கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

CBSE 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் உத்தேச தேதி பட்டியல் வெளியானது

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தற்காலிக தேதி பட்டியலை வெளியிட்டுள்ளது.

பிளான் பண்ணி பண்ணிருக்காங்க: ஐ.நா.வில் தொடர்ந்து நடந்த விபத்துகளை விசாரிக்க டிரம்ப் உத்தரவு

ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த தொடர் தொழில்நுட்ப கோளாறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட நாசவேலை செயல்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.