
CBSE 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் உத்தேச தேதி பட்டியல் வெளியானது
செய்தி முன்னோட்டம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தற்காலிக தேதி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பொது தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கும். 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9, 2026 அன்று முடிவடையும். 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9, 2026 அன்று முடிவடையும். முன்மொழியப்பட்ட புதிய CBSE விதிகள்படி 10ஆம் வகுப்பிற்கு இரண்டாவது கட்டமாகவும் பொது தேர்வுகள் இருக்கின்றன. இவை மே 15 முதல் ஜூன் 1, 2026 வரை நடைபெறும்.
நேரம்
தேர்வுகளின் நேரம்
பிப்ரவரி 17 முதல், தேர்வுகள் காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை நடைபெறும். 10ஆம் வகுப்பு தேர்வுகள் கணிதம் மற்றும் அடிப்படை கணிதம் தேர்வுகளுடன் தொடங்கி, மொழிகள் மற்றும் இசை பாடங்களுடன் முடிவடைகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வுகள் பயோ டெக்னோலஜி, Entrepreneurship, ஷார்ட் ஹாண்ட் ஆகியவற்றுடன் தொடங்கி, சமஸ்கிருதம், டேட்டா சயின்ஸ் மற்றும் மல்டிமீடியா தேர்வுகளுடன் நிறைவடைகின்றன. 204 பாடங்களில், இந்தியா மற்றும் 26 வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என CBSE எதிர்பார்க்கிறது. தற்போதைய அட்டவணை தற்காலிகமானது என்றும் பள்ளிகள் இறுதிப் பட்டியலை சமர்ப்பித்த பின் இறுதி தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.