LOADING...
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் எதிரொலி: சுஸூகியின் ஹயபூசா பைக் விலை ₹1.16 லட்சம் அதிகரிப்பு
ஜிஎஸ்டி 2.0: சுஸூகியின் ஹயபூசா பைக் விலை ரூ.1.16 லட்சம் அதிகரிப்பு

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் எதிரொலி: சுஸூகியின் ஹயபூசா பைக் விலை ₹1.16 லட்சம் அதிகரிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2025
05:33 pm

செய்தி முன்னோட்டம்

350 சிசிக்கு மேற்பட்ட என்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது பிரீமியம் பைக்குகளின் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளது. ஜிஎஸ்டி மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பைக்குகளின் பட்டியலில் புகழ்பெற்ற ஹயபூசா (Hayabusa), சாகச ரக வி-ஸ்ட்ரோம் 800DE (V-Strom 800DE) மற்றும் நடுத்தர ரக ஸ்போர்ட்ஸ் பைக்கான ஜிஎஸ்எக்ஸ்-8ஆர் (GSX-8R) ஆகியவை அடங்கும். சுஸூகியின் இந்தியப் பட்டியலில் அதிக விலை கொண்ட மாடலாக இருக்கும் ஹயபூசா, இந்த வரி திருத்தத்தால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு

விலை உயர்வு விபரங்கள்

இதன் விலையில் ₹1.16 லட்சம் உயர்ந்து, அதன் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ₹18.06 லட்சமாக அதிகரித்துள்ளது (முந்தைய விலை ₹16.90 லட்சம்). இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சூப்பர்பைக் என்ற பெருமையைக் கொண்டிருந்தாலும், இந்த திடீர் விலையேற்றம் தற்காலிகமாக விற்பனையை பாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் வலுவான ரசிகர்கள் பட்டாளம் காரணமாக, காலப்போக்கில் விற்பனை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுஸூகியின் மற்ற மாடல்களான வி-ஸ்ட்ரோம் 800DE மற்றும் ஜிஎஸ்எக்ஸ்-8ஆர் ஆகியவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன. வி-ஸ்ட்ரோம் 800DE ன் விலை ₹71,000 அதிகரித்து, இப்போது ₹11.01 லட்சத்திற்கு கிடைக்கிறது. அதேபோல், ஜிஎஸ்எக்ஸ்-8ஆர்-ன் விலை ₹64,000 உயர்ந்து, ₹9.89 லட்சமாக உயர்ந்துள்ளது.