LOADING...
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்று 5 மாவட்டங்கள், நாளை 4 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு!
அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்று 5 மாவட்டங்கள், நாளை 4 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2025
01:39 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 25) 5 மாவட்டங்களுக்கும், நாளை (செப்டம்பர் 26) 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இதன் விளைவாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை

கனமழை பெய்யும் மாவட்டங்கள்

இன்று (செப். 25): நீலகிரி கோயம்புத்தூர் தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி நாளை (செப். 26): நீலகிரி கோயம்புத்தூர் தேனி தென்காசி செப். 27: கோயம்புத்தூர் நீலகிரி சென்னையை பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.