LOADING...
பிளான் பண்ணி பண்ணிருக்காங்க: ஐ.நா.வில் தொடர்ந்து நடந்த விபத்துகளை விசாரிக்க டிரம்ப் உத்தரவு
இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதில் ரகசிய சேவை ஈடுபடும் என்றும் டிரம்ப் கூறினார்

பிளான் பண்ணி பண்ணிருக்காங்க: ஐ.நா.வில் தொடர்ந்து நடந்த விபத்துகளை விசாரிக்க டிரம்ப் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2025
08:28 am

செய்தி முன்னோட்டம்

ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த தொடர் தொழில்நுட்ப கோளாறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட நாசவேலை செயல்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். தொடர்ந்து, இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதில் ரகசிய சேவை ஈடுபடும் என்றும் கூறினார். "ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று ஒரு உண்மையான அவமானம் நடந்தது - ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று மிகவும் மோசமான நிகழ்வுகள்!" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

சம்பவம்

ஒவ்வொரு சம்பவத்தையும் எடுத்துரைத்த டிரம்ப்

ஐநா சபையில் பிரதான பேச்சு மாடிக்கு மெலனியாவுடன் செல்ல எத்தனித்த போது எஸ்கலேட்டர் திடீரென நின்றது. அதோடு இது "முழுமையான நாசவேலை" என்றும் லண்டன் டைம்ஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி டிரம்ப் குறிப்பிட்டார். அதில், கடந்த காலத்தில் ஐநா தொழிலாளர்கள் எஸ்கலேட்டரை அணைப்பது குறித்து நகைச்சுவையாக பேசியதாக இருந்த செய்தியை மேற்கோள் காட்டியிருந்தார். அடுத்ததாக, உலகத் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றியபோது, ​​தனது டெலிப்ராம்ப்டர் திடீரென இருட்டடிப்பு செய்யப்பட்டதையும் டிரம்ப் நினைவு கூர்ந்தார். டெலிப்ராம்ப்டர் சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு வேலை செய்ய தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். இறுதியாக, அரங்கத்தில் உள்ள ஒலி அமைப்பு பழுதடைந்ததாகவும், இதனால் உலகத்தலைவர்கள் மொழிபெயர்ப்பாளர் காதணிகள் இல்லாமல் தனது கருத்துக்களை கேட்க முடியாது போனதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்