LOADING...
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியை ஒரு மணி நேரம் காக்க வைத்து சந்தித்த டிரம்ப்
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியை காக்க வைத்து சந்தித்த டிரம்ப்

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியை ஒரு மணி நேரம் காக்க வைத்து சந்தித்த டிரம்ப்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2025
10:46 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். 2019 க்குப் பிறகு ஒரு பாகிஸ்தான் பிரதமர் ஓவல் அலுவலகத்திற்கு வருவது இதுவே முதல்முறை என்பதால், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய ராஜதந்திர உறவு மேம்பாட்டை இது சுட்டிக்காட்டுவதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. எனினும், சந்திப்பிற்கு முன்னதாக பாகிஸ்தான் தலைவர்கள் ஒரு மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் - ஹமாஸ்

இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சினை

இந்த வாரம் ஐநா பொதுச் சபையின் இடையே நடந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்த வியூகத்தைப் பற்றி விவாதிக்க டிரம்ப்பைச் சந்தித்த அரபு அல்லது முஸ்லிம் நாடுகளின் உயர்மட்ட தலைவர்களில் ஷெரீஃபும் ஒருவர் ஆவார். இந்த ஆண்டு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டத்தைக் குறைப்பதற்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டி, அவருக்கு நோபல் அமைதிப் பரிசுக்கு ஷெரீஃப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததில் இருந்து பாகிஸ்தான், டிரம்ப்பின் ஆதரவைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், அதிபர் டிரம்ப் இந்தியாவுடனான வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நம்பிக்கை தெரிவித்தார். சமூக ஊடகப் பதிவில், மிக நல்ல நண்பரான, பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வெற்றிகரமான தீர்மானம் எட்டப்படும் என்றார்.