LOADING...
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு; மூன்று தமிழக வீரர்களுக்கு இடம்
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு; மூன்று தமிழக வீரர்களுக்கு இடம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2025
02:09 pm

செய்தி முன்னோட்டம்

வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இத்தொடரில் ஷுப்மன் கில் முதன்முறையாக உள்நாட்டில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் ரவீந்திர ஜடேஜாவை துணை கேப்டனாக செயல்பட உள்ளார். அணிவகுப்பு வழக்கம் போல் வலுவான ஆல் ரவுண்டர் பிரிவைக் கொண்டுள்ளது. ஜடேஜாவுடன் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் படேல் ஆகிய முன்னணி சுழல் ஆல் ரவுண்டர்களும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் உள்ளனர். வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி இடம்பெறுகிறார்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்டிற்கு அணியில் இடமில்லை

முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் உள்ளனர். காயத்திலிருந்து முழுமையாக மீளாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், துருவ் ஜூரல் மற்றும் என்.ஜெகதீசன் விக்கெட் கீப்பர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தொடர், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியில் இந்தியாவின் இரண்டாவது தொடராகும். முதல் டெஸ்ட் அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்திலும், இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 10 ஆம் தேதி டெல்லியிலும் தொடங்குகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 28 புள்ளிகளைப் பெற்றதன் மூலம், இந்தியா தற்போது WTC பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

வீரர்கள்

வீரர்கள் பட்டியல்

இந்திய கிரிக்கெட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், பி சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரீத் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், என்.ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்).