LOADING...
பிசிசிஐ மேல்முறையீடு: சூர்யகுமார் யாதவ் மீதான ஐசிசி அபராதத்தை எதிர்த்து நடவடிக்கை
சூர்யகுமார் யாதவ் மீதான ஐசிசி அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு

பிசிசிஐ மேல்முறையீடு: சூர்யகுமார் யாதவ் மீதான ஐசிசி அபராதத்தை எதிர்த்து நடவடிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2025
08:02 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி விதித்த 30% போட்டி ஊதிய அபராதத்தை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேல்முறையீடு செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பூசலைக் குறிக்கும் வகையில் அவர் கருத்து தெரிவித்ததால், இந்த அபராதம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் 14 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இந்திய ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), ஐசிசியிடம் முறையிட்டது.

நிராகரிப்பு

விசாரணையில் சூர்யகுமார் வாதம் நிராகரிப்பு

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 25 அன்று நடந்த அதிகாரப்பூர்வ விசாரணையில், நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன், சூர்யகுமார் யாதவின் குற்றமற்றவர் என்ற வாதத்தை நிராகரித்தார். எனினும், இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, பிசிசிஐ இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இதேபோல், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஹாரிஸ் ரவுஃப் மீதும் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஹாரிஸ் ரவுஃப் தனது சைகை 6-0 எண்கள் இந்தியாவைக் குறிக்கவில்லை என்றும், ஃபர்ஹான் துப்பாக்கிச் சைகை கலாச்சார வெளிப்பாடு என்றும் வாதிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செப்டம்பர் 28 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் மீண்டும் மோத உள்ளன.