LOADING...
OpenAI இன் ChatGPT 'Pulse' அறிமுகம்: இனி கேள்விகளுக்கு மட்டும் பதிலல்ல; ஒரு PA போல செயல்படும்!
ChatGPT Pro சந்தாதாரர்களுக்காக இந்த அம்சம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

OpenAI இன் ChatGPT 'Pulse' அறிமுகம்: இனி கேள்விகளுக்கு மட்டும் பதிலல்ல; ஒரு PA போல செயல்படும்!

எழுதியவர் Venkatalakshmi V
Sep 26, 2025
08:51 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் விதமாக, OpenAI தனது ChatGPT தளத்தில் 'Pulse' என்ற புதிய தனிப்பயனாக்கப்பட்ட உதவியாளர்(Personal Assistant) அம்சத்தை முன்னோட்டமாக தொடங்கியுள்ளது. மொபைல் பயன்பாட்டிலுள்ள ChatGPT Pro சந்தாதாரர்களுக்காக இந்த அம்சம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ChatGPT-ஐ வெறும் 'கேள்விகளுக்கு பதிலளிக்கும் இயந்திரம்' என்ற நிலையிலிருந்து மாற்றி, முன்னோக்கிச் செயல்படும் (Proactive) தனிப்பட்ட உதவியாளர் ஆக்குவதே இந்த பல்ஸின் நோக்கம் என்று OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

செயல்பாடு

Pulse என்றால் என்ன? அது என்ன செய்யும்?

'Pulse' என்பது, பயனரின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஒரு புதிய அம்சமாகும். சாம் அல்ட்மேன் தெரிவித்துள்ளதன்படி, கேள்விகளுக்குப் பதிலளிப்பதை விட, Pulse ஆனது பின்னணியில் தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொள்ளும். தினசரி புதுப்பிப்புகள்: இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், Visual Cards வடிவத்தில் தினசரி புதுப்பிப்புகளாக பயனருக்கு திரையில் தோன்றும். இந்த புதுப்பிப்புகள், பயனரின் சாட்கள், கருத்துகள், விருப்பத்தேர்வுகள் மற்றும் விருப்பத்தின் பேரில் இணைக்கப்பட்ட Gmail மற்றும் Google Calendar போன்ற பிற ஆப்களின் டேட்டாகளால் வடிவமைக்கப்படுகின்றன. உதாரணமாக, நீங்கள் Google Calendar-ஐ இணைத்தால், வரவிருக்கும் பயணங்களுக்கு அருகிலுள்ள உணவகங்களைப் பரிந்துரைப்பது, ஒரு agenda தயாரிப்பது அல்லது நண்பரின் பிறந்தநாள் பரிசுகளைப் பற்றி முன்கூட்டியே நினைவூட்டுவது போன்ற வேலைகளை ChatGPT இப்போது செய்யும்.

பயன்பாடு

பயன்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எப்படி?

ஆரம்பத்தில், தினசரி இரவு உணவு சமையல் குறிப்புகள், உடற்பயிற்சி முன்னேற்றக் குறிப்புகள் போன்ற எளிமையான தகவல்களை Pulse வழங்கும். கட்டுப்பாட்டு வசதி: பயனர்கள் 'curate' பொத்தானை அழுத்துவதன் மூலமோ அல்லது எளிமையான 'லைக்/டிஸ்லைக்' (Thumbs-up/Down) மூலம் கருத்துக்களை வழங்குவதன் மூலமோ, Pulse எதை கண்காணிக்க வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். விருப்பத் தேர்வு: Calendar போன்ற பிற செயலிகளுடன் ஒருங்கிணைப்புகள் முற்றிலும் விருப்பத்தேர்வாகவே இருக்கும் என்று OpenAI உறுதி செய்துள்ளது. தற்போது, 'Pulse' அம்சம் ChatGPTன் 'Pro' சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த ஆரம்பகட்ட முன்னோட்டத்தின் மூலம், இதை செம்மைப்படுத்திய பிறகு, 'Plus' சந்தாவுக்கும், இறுதியாக அனைத்து பயனர்களுக்கும் கொண்டு வருவதே OpenAI-ன் இலக்காகும்.