LOADING...
ஆசிய கோப்பை: இன்று இந்தியா - இலங்கை மோதல்; இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி
இன்று இரவு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன

ஆசிய கோப்பை: இன்று இந்தியா - இலங்கை மோதல்; இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 26, 2025
09:54 am

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில், இன்று இரவு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் தனது முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

வாய்ப்பை இழந்த இலங்கை

சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி, சூப்பர் 4 சுற்றில் தனது இரண்டு ஆட்டங்களிலும் (வங்கதேசத்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி; பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி) தோல்வி அடைந்ததால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம், கோப்பைக்கான இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணிக்கு ஒரு சிறந்த பயிற்சி ஆட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றங்கள்

இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா? 

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் சில முக்கிய மாற்றங்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக, ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேபோல, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், நடப்பு தொடரில் இந்தியாவின் ஃபீல்டிங்கில் ஏற்பட்ட தொய்வு கவலை அளிப்பதாக உள்ளது. இந்திய வீரர்கள் இதுவரை மொத்தமாக 10 கேட்ச்களை தவறவிட்டுள்ளனர். இதில் வங்கதேச அணிக்கு எதிராக தவறவிட்ட 4 கேட்ச்களும் அடங்கும். இதனால், இன்றைய ஆட்டத்தில் ஃபீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த இந்திய அணி முனைப்புக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.