இந்தியா: செய்தி
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி செக்டரில் இருக்கும் சர்வதேச எல்லையில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள், இந்திய போஸ்ட் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்தியா டுடே டிவி செய்தியை வெளியிட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக ராஜ்கோட் விமான நிலைய முனையத்தின் கூரை உடைந்து விழுந்தது
டெல்லி விமான நிலைய கூரை நேற்று இடிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலைய முனையத்தில் உள்ள கூரை உடைந்து விழுந்துள்ளது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி
ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (ஜேசிஓ) உட்பட ஐந்து இந்திய ராணுவ வீரர்கள், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம்-1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததை அடுத்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள கட்டமைப்புகளை ஆய்வு செய்ய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு உத்தரவிட்டுள்ளார்.
யுஜிசி-நெட் மறுதேர்வுக்கான பெரிய மாற்றத்தை அறிவித்தது என்டிஏ
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி(என்டிஏ), ரத்து செய்யப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வுக்கான(யுஜிசி-நெட்) புதிய தேதிகளை நேற்று இரவு அறிவித்தது.
ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஆதரவற்ற ஜோடிகளுக்கு திருமணம்: ரிலையன்ஸ் குழுமம் அறிவிப்பு
மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஏழை மக்களுக்கான வெகுஜன திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
96,300 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு இந்தியா தயாராகிறது
96,317.65 கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றைகளுடன், இந்தியா தனது அலைக்கற்றை ஏலத்தை இன்று தொடங்க உள்ளது.
கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம்
இந்தியாவுக்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் டேனியல் கார்மன், 1999 கார்கில் போரின் போது இஸ்ரேலின் ஆதரவிற்கு "சாதகமாக" காசாவுடனான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
ஜூலை 1 முதல் விலை உயர்வை அமல்படுத்த உள்ளது ஹீரோ மோட்டோகார்ப்
உலகின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், ஜூலை 1, 2024 முதல் இந்தியாவில் விற்பனையாகும் அதன் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்த உள்ளது.
முதலீட்டை மோசடி செய்ததாக GROWW தளத்தின் மீது குற்றச்சாட்டு
இந்தியா: நிதிச் சேவை தளமான Groww, தனது முதலீட்டை ஏமாற்றயுள்ளதாக ஒரு வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் தங்க கையிருப்பு 6 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குறைந்தது
இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ) அதிக அளவிலான தங்கத்தை மீண்டும் உள்நாட்டு பெட்டகங்களுக்கு மாற்றியதனால், இந்தியாவின் வெளிநாட்டு தங்க இருப்பு ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு தனது விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
'நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம்': நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி பேச்சு
18வது மக்களவைக்கு புதிய எம்.பி.க்களை வரவேற்ற பிரதமர் மோடி, நாட்டை நடத்த ஒருமித்த கருத்து முக்கியம் என்று கூறினார்.
மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்
18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்க்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால்
மதுபானக் கொள்கை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீட் தேர்வு மோசடி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம்
பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்தது.
கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் வரும் செவ்வாய்கிழமை(ஜூன் 25) வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
நாளை தொடங்குகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்: பிரதமர் மோடி பதவியேற்கிறார்
18வது மக்களவையின் முதல் அமர்வு நாளை தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனர்.
இந்தியாவின் மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனத்தின் மூன்றாவது சோதனை வெற்றி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) இன்று மூன்றாவது மறுபயன்பாட்டு ஏவுகணை (RLV) தரையிறங்கும் பரிசோதனையை (LEX) வெற்றிகரமாக நடத்தியது.
பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் உட்பட இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு இனி வரி கிடையாது: ஜிஎஸ்டி கவுன்சில்
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு, இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கான வரி விலக்கு மற்றும் போலி இன்வாய்ஸ்களை கண்டுபிடிக்க பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் உள்ளிட்ட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் மற்ற மூன்று குற்றவாளிகளையும் ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் இடிந்து விழுந்தது மற்றொரு பாலம்: ஒரே வாரத்தில் 2 பாலங்கள் தரைமட்டம்
பீகார் மாநிலம் சிவான் பகுதியில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
கோனா எலக்ட்ரிக் மாடல் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஹூண்டாய்
எந்த அறிவிப்பும் இல்லாமல் ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா எலக்ட்ரிக் மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது.
நீட், யுஜிசி நெட் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமலுக்கு வந்தது தேர்வு மோசடிக்கு எதிரான சட்டம்
நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக பொதுத் தேர்வுகள்(நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம் நேற்று அமலுக்கு வந்தது.
14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு
14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) நரேந்திர மோடி அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவ் அறிவித்துள்ளார்.
கடுமையான வெப்ப அலையால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்பு
கடுமையான வெப்ப அலையால் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பருப்பு விலை மிகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட இந்தியாவை வாட்டும் கடும் வெயில்: டெல்லியில் 5 பேரும், நொய்டாவில் 10 பேரும் பலி
டெல்லியில் கடந்த 72 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள் வெப்பத் தாக்குதலால் இறந்தனர்.
பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் ஓராண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் கனடா நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.
பிரதமர் கிசான் திட்டம்: 9.26+ கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார் பிரதமர் மோடி
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு 17வது தவணையான 20,000 கோடி ரூபாயை இன்று பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 1.05 லட்சம் மக்கள் பாதிப்பு
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) கூற்றுப்படி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அசாமின் 14 மாவட்டங்களில் 1.05 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்குள் 4 புதிய EVகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹூண்டாய்
2025 நிதியாண்டின் கடைசி காலாண்டிற்குள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா EV உட்பட நான்கு புதிய மின்சார வாகன (EV) மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஹூண்டாய் அறிவித்துள்ளது.
வகுப்புவாத வன்முறைகளை அடுத்து ஒடிசாவில் ஊரடங்கு
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து ஒடிசாவில் உள்ள பாலசோரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020இல் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக தகவல்
ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்துகொள்ள முயற்சித்த நான்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளை 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(ஏபிசி) சமீபத்திய விசாரணை தெரிவித்துள்ளது.
ரிவர்ஸ் கியரில் இருப்பது தெரியாமல் காரின் ஆக்சிலேட்டரை அழுத்திய பெண் பள்ளத்தில் விழுந்து பலி
மகாராஷ்டிரா: வாகனம் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது காரின் ஆக்சிலேட்டரை தவறுதலாக அழுத்தியதால் 23 வயது பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
பட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் புகழைப் பாதிக்கும் பணவீக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு பட்ஜெட் 2024இல் தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது.
காஞ்சன்ஜங்கா விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின
மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் நேற்று ஒரு சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்கு பிறகு, ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்(NEET) முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மருத்துவக் கல்லூரி விண்ணப்பதாரர்களுக்கான தேசிய தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு(NTA) உச்ச நீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம்
அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் திங்களன்று தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.