
பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் உட்பட இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு இனி வரி கிடையாது: ஜிஎஸ்டி கவுன்சில்
செய்தி முன்னோட்டம்
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு, இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கான வரி விலக்கு மற்றும் போலி இன்வாய்ஸ்களை கண்டுபிடிக்க பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் உள்ளிட்ட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதில் மத்திய அரசின் நோக்கம் தெளிவாக இருப்பதாகவும், எரிபொருளின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை மாநிலங்கள் முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.
ஒற்றை அல்லது இரட்டை எரிசக்தி ஆதாரமாக இருந்தாலும் சரி, அனைத்து சோலார் குக்கர்களுக்கும் ஒரே மாதிரியான 12% ஜிஎஸ்டியை விதிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது,
இந்தியா
மாணவர்களுக்கான விடுதிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
மேலும், பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை, ஓய்வு அறை வசதி, காத்திருப்பு அறைகள், ஆடை அறை சேவைகள், பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவைகள் உள்ளிட்ட சாமானியர்களுக்கு இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு வெளியே அமைந்துள்ள மாணவர்களுக்கான விடுதிகளுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.20,000/மாதம் வரை வாடகைக்காக செலவழிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் நிபுணர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
அனைத்து பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியான 12% ஜிஎஸ்டி வரி விகிதத்தை கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
அனைத்து அட்டைப் பெட்டிகளுக்கும்/காகித பெட்டிகளுக்கும் ஒரே மாதிரியான 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.
இந்தியா
பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம்
தெளிப்பான்கள் என்று அழைக்கப்படும் அனைத்து வகையான ஸ்பிரிங்லர்களுக்கும் 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் அகில இந்திய அளவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
" வருமான வரி கொடுப்பதில் இருந்து தப்பிப்பதற்காக உருவாக்கப்படும் போலி இன்வாய்ஸ்கள் மூலம் செய்யப்படும் மோசடியை எதிர்த்துப் போராட இது எங்களுக்கு உதவும்," என்று அவர் கூறியுள்ளார்.
சிறிய அளவில் வரி செலுத்துவோருக்கு உதவ, ஜிஎஸ்டிஆர் 4 படிவத்தின் விவரங்கள் மற்றும் ரிட்டர்ன்களை பதிவு செய்வதற்கான கால வரம்பு, ஏப்ரல் 30இல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.