நீட், யுஜிசி நெட் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமலுக்கு வந்தது தேர்வு மோசடிக்கு எதிரான சட்டம்
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக பொதுத் தேர்வுகள்(நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம் நேற்று அமலுக்கு வந்தது.
நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளை நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொதுத் தேர்வுகள் சட்டம், தேர்வுகளில் ஏமாற்றுபவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வல்லதாகும்.
தேர்வு மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் 1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று இந்த சட்டம் குறிப்பிடுகிறது.
இந்தியா
1 கோடிக்கு குறையாமல் அபராதம்
தேர்வை நடத்தும் அல்லது தேர்வுடன் தொடர்புடைய ஏதேனும் நிறுவனம் அல்லது தனிநபர் குழுவாக தேர்வுகளில் மோசடி செய்தால், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள் என்று பழைய சட்டம் கூறுகிறது.
ஆனால், தற்போதைய சட்டத்தின் படி, அது பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். மேலும், அவர்களுக்கு 1 கோடிக்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
திட்டம்போட்டு வினாத்தாள் கசிவு குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், ஒரு நிறுவனத்தின் சொத்தை பறிமுதல் செய்வதற்கும் சட்டத்தில் விதிகள் உள்ளன.
மேலும் தேர்வுக்கான விகிதாசார செலவும் அதிலிருந்து வசூலிக்கப்படும். ஆனால், இந்தச் சட்டம் தேர்வில் தோன்றும் மாணவர்களை தண்டனை விதிகளிலிருந்து பாதுகாக்கிறது.