Page Loader
டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு 

டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு 

எழுதியவர் Sindhuja SM
Jun 29, 2024
11:43 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம்-1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததை அடுத்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள கட்டமைப்புகளை ஆய்வு செய்ய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு உத்தரவிட்டுள்ளார். "நாங்கள் அனைத்து விமான நிலையங்களிடம் இருந்தும் அறிக்கையை கோரியுள்ளோம் ... 2-5 நாட்களுக்குள், என்ன தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் பார்ப்போம்," என்று அவர் கூறியுள்ளார் நேற்று பெய்த கனமழையின் போது டெல்லி விமான நிலையத்தில் உள்ள கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 45 வயதான வண்டி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.

டெல்லி 

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானங்கள் ஏற்பாடு 

இதைத் தொடர்ந்து, விமானத்தில் ஏற முடியாமல் பாதிக்கப்பட்ட பயணிகளின் சிரமத்தைக் குறைக்கவும், அவர்களது பணத்தைத் திரும்ப அளிப்பதை உறுதிசெய்யவும் ஒரு போர் அறை அமைக்கப்பட்டுள்ளது மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானங்களும் வழங்கப்பட்டுள்ளன. "விமானத்தில் ஏறாமல் திரும்பிய பயணிகள், பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது மாற்று விமானங்களும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று நாயுடு கூறியுள்ளார். அடுத்த ஏழு நாட்களுக்குள் பயணிகலின் பணம் திரும்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாயுடு, இறந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.