NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம்
    இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் இஸ்ரேலிய தூதர் கூறியுள்ளார்

    கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 25, 2024
    10:23 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவுக்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் டேனியல் கார்மன், 1999 கார்கில் போரின் போது இஸ்ரேலின் ஆதரவிற்கு "சாதகமாக" காசாவுடனான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

    அவரின் இந்த கூற்று அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

    இஸ்ரேலின் Ynetnewsக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானுடனான கார்கில் போரின் போது இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கிய சில நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று என்று டேனியல் கார்மன் கூறினார்.

    2014 முதல் 2018 வரை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதராக பணியாற்றிய கார்மன் கூறுகையில், "கார்கில் போரின்போது இஸ்ரேல் தங்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதை இந்தியர்கள் எப்பொழுதும் நினைவுகூருகிறார்கள்... இந்தியர்கள் இதை மறந்துவிட மாட்டார்கள். இப்போது அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கலாம்" என்று கூறினார்.

    கார்கில் போர்

    இந்தியாவிற்கு தளவாடங்கள் வழங்கி உதவிய இஸ்ரேல்

    1999 கார்கில் போரின் போது, ​​வெடிமருந்துகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களையும், உபகரணங்களையும் இஸ்ரேல் வழங்கியது.

    மத்திய கிழக்கு நாடான காசாவுடனான போரில் இந்தியா இஸ்ரேலுக்கு ட்ரோன்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கியதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் டேனியல் கார்மனின் கருத்துக்கள் வந்துள்ளன.

    முன்னதாக பிப்ரவரியில், ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட ஹெர்ம்ஸ் 900 ட்ரோன்களை இந்தியா இஸ்ரேலுக்கு வழங்கியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

    எனினும் இந்திய ராணுவத்திற்கு தேவையான பொருட்களை தயாரிப்பதற்காக ஹைதராபாத் வசதியை இஸ்ரேல் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

    எவ்வாறாயினும், சுமார் 20 ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கு அனுப்பப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

    எனினும், இந்தியா இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை, அதோடு கார்மனின் கருத்துகளுக்கும் இதுவரை பதிலளிக்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இஸ்ரேல்
    காசா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக்கிங் செய்யப்பட்டதாக சர்ச்சை  மும்பை
    அக்னிபாத் திட்டம் குறித்து பரவிய வாட்ஸ்அப் செய்தி போலியானது: PIB  இந்தியா
    புதிய எரிபொருள் திறன் விதிமுறைகளால் இந்தியாவில் கார்களின் விலை உயரலாம்  கார்
    அனைத்து விதமான பொருட்களையும் விற்க டார்க் ஸ்டோர்களை விரிவாக்கம் செய்ய உள்ளது செப்டோ  வணிகம்

    இஸ்ரேல்

    ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் ஈரான்
    விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை ஈரான்
    இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்  ஈரான்
    மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல்  ஈராக்

    காசா

    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல் இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா இந்திய ராணுவம்
    பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025