Page Loader
கோனா எலக்ட்ரிக் மாடல் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஹூண்டாய் 

கோனா எலக்ட்ரிக் மாடல் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஹூண்டாய் 

எழுதியவர் Sindhuja SM
Jun 22, 2024
04:02 pm

செய்தி முன்னோட்டம்

எந்த அறிவிப்பும் இல்லாமல் ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா எலக்ட்ரிக் மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது. ஹூண்டாய் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து கோனா எலக்ட்ரிக் அகற்றப்பட்டததை அடுத்து இது வெளிச்சத்திற்கு வந்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் வெகுஜன சந்தை மின்சார வாகனமான CRETA EV அறிமுகம் செய்யப்பட உள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கோனா எலக்ட்ரிக் என்பது ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் மின்சார வாகனமாகும். ஆனால் அதன் பழமையான இன்டீரியர் டிசைன் மற்றும் கிராஸ்ஓவர் நிலை காரணமாக SUVகள் பிரபலமடைந்து வரும் காலகட்டத்தில் கோனா எலக்ட்ரிக் அதிகமாக விற்பனையாகவில்லை.

ஹூண்டாய் 

 ஜனவரி 2025இல்  வெளியாகிறது CRETA EV 

ஜனவரி 2025 இல் CRETA EV ஐ அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஹூண்டாய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபலமான CRETA இன் மின்சார பதிப்பு தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஹூண்டாய் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும். இது ஏற்கனவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் SUVகளில் ஒன்றாகும். CRETA EVயின் விலை சுமார் ரூ.20 லட்சம் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. CRETA EV இன் அம்சங்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இது மாருதி சுஸூகியின் வரவிருக்கும் eVX எலக்ட்ரிக் எஸ்யூவியைப் போலவே, சுமார் 400-500 கிமீ வரையிலான வரம்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.