Page Loader
காஞ்சன்ஜங்கா விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின 

காஞ்சன்ஜங்கா விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின 

எழுதியவர் Sindhuja SM
Jun 18, 2024
12:49 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் நேற்று ஒரு சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் 20 மணி நேரத்திற்கு பிறகு, ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. சம்பவ இடத்தில் இருக்கும் மேலே செல்லும் தடங்களும் கீழே இறங்கும் தடங்களும் இப்போது சாதாரணமாக இயங்குகின்றன. மேலும் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று நடந்த இந்த விபத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். எனவே, அதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்தியா 

இந்த விபத்து எதனால் நடந்தது?

மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.16 மணிக்கு கொல்கத்தாவின் சீல்டாவுக்கு சென்று விபத்துக்குள்ளான கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் இலக்கை அடைந்தது. சமத்துவ இடத்தில் கிடந்த சிதைந்த பெட்டிகள், பழுதுபார்க்கும் பணியின் ஒரு பகுதியாக மீட்பு குழுக்களால் அகற்றப்பட்டது. ஆரம்பத்தில், சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலை மீறிச் சென்றதால் இந்த பெரிய விபத்து ஏற்பட்டதாக ரயில்வே வாரியம் கூறியிருந்தது. ஆனால், விபத்து நடந்த பகுதியில் நேற்று காலை முதல் தானியங்கி சிக்னலிங் அமைப்பு வேலை செய்யவில்லை என்பதை உள் ஆவணங்கள் பின்னர் காட்டின. எனவே, சிக்கனல் விழததனால் தான் இந்த விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.