லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி
ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (ஜேசிஓ) உட்பட ஐந்து இந்திய ராணுவ வீரர்கள், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்கள் பயணித்த டேங்க் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. லடாக்கின் தௌலத் பெக் ஓல்டி பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே அதிகாலை 1:00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. பயிற்சிப் பயணத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள், லேயில் இருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்திர் மோர் அருகே போதி ஆற்றைக் கடந்தபோது, அவர்களது டி-72 டேங்கில் எதிர்பாராத விதமாக நீர்மட்டம் உயர்ந்தது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2005 முதல் லடாக்கில் தொடரும் திடீர் வெள்ளங்கள்
டேங்க்ஸ்டீக்கு அவர்களது டேங்க் சென்று கொண்டிருந்த போது இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. 2005 முதல், லடாக் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த திடீர் வெள்ளங்கள், வறண்ட காலநிலை, அதிக உயரம் மற்றும் பாறை நிலப்பரப்பு போன்ற லடாக்கின் தனித்துவமான புவியியல் அம்சங்களால் ஏற்படுகின்றன,. இது மேக வெடிப்புகளால் தூண்டப்படும் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது. 2010 ஆம் ஆண்டில், ஆறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 255 பேர் திடீர் வெள்ளத்தால் கொல்லப்பட்டனர்.