Page Loader
பிரதமர் கிசான் திட்டம்: 9.26+ கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார் பிரதமர் மோடி 

பிரதமர் கிசான் திட்டம்: 9.26+ கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார் பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Jun 18, 2024
06:23 pm

செய்தி முன்னோட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு 17வது தவணையான 20,000 கோடி ரூபாயை இன்று பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தனது தொகுதியான வாரணாசிக்கு இன்று முதல்முறையாக சென்ற பிரதமர் மோடி, அங்கு வைத்து பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் 17வது தவணையை விவசாயிகளுக்கு வழங்கினார். இன்று மாலை 4:00 மணியளவில் வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, மாலை 5:00 மணிக்குப் பிறகு PM-KISAN மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு மூன்று விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர் .

இந்தியா 

'என்னை 3வது முறையாக தேர்வு செய்த காசிக்கு நன்றி': பிரதமர் மோடி 

பிரதமர் மோடி தனது உரையை தொடங்கி வைத்து பேசுகையில், "தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாரணாசிக்கு வந்துள்ளேன். காஷியேட்ஸ், பாபா காசி விஸ்வநாத் மற்றும் மா கங்கா ஆகியோரை வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் தேர்தல் செயல்முறையை பாராட்டிய பிரதமர் மோடி, "இந்தத் தேர்தல் உலகத்தின் முன் இந்தியாவின் பலத்தை காட்டுகிறது" என்று கூறினார். "ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வாக்காளர்களை விட இந்திய வாக்காளர்கள் இரண்டரை மடங்கு அதிகம். ஜனநாயகத்தின் இந்த திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி, மூன்றாவது முறையாக பிரதமரை தேர்ந்தெடுத்த காசி மக்களுக்கு எனது நன்றி" என்றும் அவர் கூறியுள்ளார்.