ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி செக்டரில் இருக்கும் சர்வதேச எல்லையில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள், இந்திய போஸ்ட் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்தியா டுடே டிவி செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்ததாக ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய எல்லைக்குள் இருக்கும் கிருஷ்ணா காடி என்ற பகுதியில் உள்ள ஒரு இந்திய போஸ்ட் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை பாதுகாக்கும் இந்திய இராணுவத் துருப்புக்கள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர்.
பாகிஸ்தான்
அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது
சிறிது நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் இந்தியா-பாகிஸ்தானுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகும்.
பாகிஸ்தான் படையினரின் இந்த போர்நிறுத்த மீறல், ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவி செய்யும் முயற்சியாக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தாக்குதல் காரணமாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.