
பட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் புகழைப் பாதிக்கும் பணவீக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு பட்ஜெட் 2024இல் தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது.
அதே வேளையில், தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதிலும் பாஜக அரசு கவனம் செலுத்தும்.:
இதற்கிடையில், கச்சா எண்ணெய்யின் உலகளாவிய விலை பீப்பாய் ஒன்றுக்கு $70 க்கும் கீழே சரிந்த பின்னரே விலை குறைப்பு சாத்தியமாகும் என்று எண்ணெய் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். எனவே, பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதில் இருந்து வீட்டு விலைகள் அதிகரித்துள்ளன.
இந்தியா
வீடுகளின் விலை வரம்பை அரசாங்கம் உயர்த்தக்கூடும்
எனவே அடுத்த கட்டமாக, வீடுகளின் விலை வரம்பை அரசாங்கம் உயர்த்தும் என்று கூறப்படுகிறது.
அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும். மேலும், கட்டுமானம் தொடர்பான வேலைகளையும் இது உருவாக்கும். டெவலப்பர்கள் முதல் சிமெண்ட் தயாரிப்பாளர்கள், பெயிண்ட் நிறுவனங்கள் வரை அனைவருக்கும் இது லாபத்தை உண்டாக்கும்.
நடப்பு நிதியாண்டில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ஏற்கனவே ₹80,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பான ரூ.4 லட்சம் கோடியில் தோராயமாக 20% ஏற்கனவே பிப்ரவரி இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கூட்டணி அழுத்தங்கள் நிதி ஸ்திரத்தன்மைக்கு இடையூறாக இருக்காது என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்ட விரும்புவார்.
எனவே, நிதிப்பற்றாக்குறையை நிர்ணயிக்கப்பட்ட 4.5% குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்தியா
மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிக முதலீடு
அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களின் மூலம் எதிர்பார்த்த அளவுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியவில்லை என்பதால், தனியார் முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் இருக்கும் நிறுவனங்களை, பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ போன்ற இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிட அனுமதிக்கும் மற்றொரு கொள்கையை அரசாங்கம் பின்னர் செயல்படுத்தலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய சாலைகளில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் ரூ.70,000 கோடி ஒதுக்கலாம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதில் பெரும்பாலான பணம் முதலீடு செய்யப்படும்.