
14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
14 குறுவை சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) நரேந்திர மோடி அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவ் அறிவித்துள்ளார்.
"இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சில மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனுக்காக மிக முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. குறுவை பருவம் துவங்குகிறது. அதற்காக 14 பயிர்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெல்லுக்கான புதிய MSP ரூ. 2,300 ஆகும். இது முன்பு இருந்த MSPயை விட ரூ.117 அதிகமாகும்" என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் வைஷ்ணவ் கூறியுள்ளார்
"பிரதமர் மோடியின் மூன்றாவது பதவிக்காலம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது விவசாயிகளின் நலனுக்கான மாற்றங்களில் கவனம் செலுத்துகிறது" என்று அமைச்சர் வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இந்தியா
குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளது புதிய கடலோர காற்றாலைகள்
இன்றைய முடிவிற்குப் பிறகு விவசாயிகள் சுமார் ரூ.2 லட்சம் கோடியை MSPயாகப் பெறுவார்கள் என்று வைஷ்ணவ் கூறியுள்ளார்.
"இது முந்தைய சீசனைக் காட்டிலும் ரூ.35,000 கோடி அதிகமாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய கூட்டத்தில் இந்தியாவின் முதல் கடலோர காற்றாலை ஆற்றல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
"இவை 1GW கடலோர காற்றாலை திட்டங்களாக இருக்கும், ஒவ்வொன்றும் 500 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கக்கூடியதாக இருக்கும். இந்தியாவுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு" என்று வைஷ்ணவ் மேலும் கூறினார்.
இந்த காற்றாலைகள் குஜராத் மற்றும் தமிழ்நாடு கடற்கரைகளில் அமைக்கப்பட உள்ளன.