நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்(NEET) முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மருத்துவக் கல்லூரி விண்ணப்பதாரர்களுக்கான தேசிய தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு(NTA) உச்ச நீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"0.001% அலட்சியம் இருந்தால் கூட, அதை முழுமையாக சரிபார்க்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 8ஆம் தேதி நடைபெறும்.
2024 நீட்-UG தேர்வை எழுதிய 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாகவும், ஜூன் 23 ஆம் தேதி அவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம் என்றும் கடந்த வியாழக்கிழமை NTA உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்தியா
மறு-தேர்வை எழுதவில்லை என்றால் என்ன ஆகும்?
அந்த மறு தேர்வின் முடிவுகள் ஜூன் 30க்கு முன் அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வர்களில் எவரேனும் மறு-தேர்வை எழுதவில்லை என்றால், கருணை மதிப்பெண் நீக்கப்பட்ட அவர்களின் முந்தைய மதிப்பெண்கள் மீண்டும் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மே 5ஆம் தேதி 24 லட்சம் மாணவர்கள் எழுதிய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன.
அதன் பிறகு, அந்த தேர்வின் கேள்வி தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகின.
அந்த தேர்வில் 67 மாணவர்கள் 720/720 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.